பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. கம்பனில் மக்கள் குரல் இங்கனம் பிற்காலத்தில் சிறந்த வீரனுக விளங்கி வதற்கு வேண்டிய அறிகுறிகள் யாவும் இவன் இளமைப் பருவத்திலே புலயிைன என்பதை இவன் இறந்த பிறகே கம்பன் நமக்குக் காட்டுகின்றன். இவ்வாறு இளமை யிலேயே பல வீரச்செயல்களை நிகழ்த்திய மேகநாதன் இராவணனுக்கு ஒரு சிறந்த பக்க பலமாக இருந்து விளங் கிளுன் செயற்கரிய செயல்களையெல்லாம் செய்து புகழ் பெற்ருன். . இலக்குவல்ை மூக்கும் காதும் வெம்முரண் முலைக் கண் களும் முறையே’ போக்கப்பட்ட சூர்ப்பணகை தன் சுற்றத்தாரை யெல்லாம் நினைத்துப் புலம்பும் போது கூட, தானவரைக் கருவ றுத்துச் சதமகனைத் தளையிலிட்டு வானவரைப் பணிகொண்ட மருகாவோ மருகாவோ? என்று இவனைக் குறிப்பிட்டுப் புலம்புகின்ருள். போரில் முதன்முதலாக இவனேச் சந்தித்த இலக்குவன் இவனே யார் என்று வினவ, அதற்கு வீடணன், "ஆரிய, இவன்இகல் அமரர் வேந்தனைப் போர்க டந்தவன் " என்று அறிவித்து, இன்று போர் வலிது “ என்று அன்றையப் போரின் கொடுமையையும் குறிப்பாற் புலப்படுத்துகின்ருன். துது சென்றபோது அநுமனப் பாசத்தால் பிணித்தப்போதும், இராம-இராவணப்போர் நடைபெற்ற காலத்தும், பிற சமயங்களிலும் இவன் ஆற்றிய வீரச்செயல்களுக்கெல்லாம் இவனது இளமைப் பருவத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அறிகுறிகளாக இருந்தன என்பதை அறியும்போது, விளையும் பயிர் முளை யிலே தெரியும் என்பதை உணர்கின்ருேமன்ருே? 9. சூர்ப்பனகைப்-111 10, 11. நாகப்பாசப்.28