பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. சிறைவைத்த காதல்: இராமலட்சுமணரும் சீதாப்பிராட்டியும் கோதாவரி நதிக்கருகிலுள்ள பஞ்சவடிக்கு வருகின்றனர். அப்பஞ்ச வடியில் மிகவும் தனிமையாக அமைந்துள்ள சோலே யொன்றில் இலக்குவல்ை இனிமையாகச் சமைக்கப்பட்ட பர்ணசாலையில் அவர்கள் மூவரும் தங்கியிருக்கின்றனர். இவர்கள் இங்கு தங்கியிருக்கும்போதுதான் அரக்கர்களின் அழிவு காலத்திற்கு முதற் செயல் தொடங்குகின்றது. இராவணன் தன் குலத்துடன் நாசமடைவதற்கு வேண்டிய வித்தும் இடப்பெறுகின்றது. தன் குலத்துக்கே இறுதி காட்டக் கூடிய சூர்ப்பணகை அங்கு வருகின்ருள். பின்னல் பெரிதாக வளரக்கூடிய ஒரு மரம் அதன் விதையிலேயே சிறிய வடிவில் தோன்றி உறைவது போலவே தன் குலத்திற்கே நாசத்தை விளை விக்க வல்ல சூர்ப்பணகை அரக்கர் குலத்தில் தோன்றி வசித்து வருகின்ருள். விதை முளைப்பதற்கு வேண்டிய ஈரம், காற்று, வெப்பம் ஆகியவை தக்க அளவில் கிடைத்தவுடன்

  • பழநியாண்டவர் திருக்கோயில் குடமுழுக்கு விழா சிறப்பு மலரில் (1974) வெளிவந்தது.