பக்கம்:கம்பனின் மக்கள் குரல்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறைவைத்த காதல் 灣懸 காலால் உதைக்கின்றன். உடனே சூர்ப்பனகை விண் வழியாகத் தன்னைத் தூக்கிச் செல்ல முயற்சி செய்யும் போது அவளை விரைவில் கிழே தள்ளி, உடைவாளை உருவி யெடுத்து, 'மூக்கும் காதும்வெம் முரண்முலைக் கண்களும் முறையால் போக்கிப் போக்கிய சினத் தொடும் புரிகுழல் விட்டான்." (முலைக்கண்கள்- முலைக்காம்புகள்: முறையால்; ஒன்றன்பின் ஒன்ருக; போக்கி-அறுத்துபோக்கிய சினத்தொடும்.தணிந்த கோபத் துடன்; புரிகுழல்-சுற்றிப்பிடித்த கூந்தல்) தன் குலத்தார்களேயெல்லாம் நினைத்து நினைத்துப் புலம்புகின்ருள் சூர்ப்பணகை. அவ்விடத்திற்கு வந்த இராமனிடமும் முறையிடுகின்ருள். இலக்குவனேயாவது தன்னை மணக்க ஏற்பாடு செய்யும்படி வேண்டுகின்ருள். ஒன்றும் பலிக்கவில்லை. இறுதியில் இராமலட்சுமணர்கள் இவளேக் கொல்ல நினைக்கின்றனர். இதையறிந்து அவள், காற்றினிலும் கனலினிலும் கடியானைக் கொடியானைக் கரனே உங்கள் கூற்றுவனை இப்பொழுதே கொணர்கின்றேன் என்று சலங் கொண்டு போளுள்." (கனல்.நெருப்பு; கூற்றுவன்.யமன்;சலங்கொண்டு. தணியாத முற்றின வைரங் கொண்டு! அவ்வாறே பெருஞ்சேனையுடன் கரனும் அவன் தம்பி துரடணனும் வந்து இராமலட்சுமணர்களை எதிர்த்துக் குலத்தோடு மடிகின்றனர். 2. சூர்ப்பணகைப்-94 3. டிெ 143