பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கம்பன் - புதிய பார்வை மணிமேகலையிலும், ஆசிரியமாலைத் தொகுப்பிலும் காண முடிகிறது. அடுத்து வந்த ஆழ்வார்கள் அதனை வலியுறுத்திச் சென்றனர். இந்த நிலையில் இக் கருத்துக்கு மாறான ஒரு கருத்தை எளிதில் கூறிவிட முடியாது என்றாலும் இரண்டே இடங்களில் மட்டும் இதனைக் கூறிவிட்டு, மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் அவன் மூலப் பரம்பொருள் என்றே பேசுகிறான் கம்பன். மேலே கூறிய அடிப்படைகள் அனைத்தும் அவ னுடைய மனத்திரையில் ஒடின காரணத்தால் கம்பன் தன் காவியத்தை அதற்கு முன்னர் யாரும் நினைத்தும் பார்த்திராத புதுமுறையில் அமைக்கின்றான். பிற காப்பியங்களுடன் ஒப்பு இந்த நிலையில் திறனாய்வு முறையில் சிலவற்றைச் சிந்திக்க வேண்டும். காப்பியம் என்று பெயர் சூட்டிவிட்ட ஒரே காரணத்துக்காக மேனாட்டுக் காப்பியங்களுடன் இதை ஒப்பிட்டுப் பார்ப்பது பொருத்தமாகப் படவில்லை. ஒரு சில பகுதிகளை, ஒப்புநோக்கி அனுபவிப்பதற்காகக் காணலாமே தவிர, அதற்கு மேலும் சென்று, ஒப்புநோக்கித் திறனாய்வு செய்வது பொருத்தமற்றதாகிவிடும். இந்த நாட்டில் தோன்றிய எந்த இலக்கியமும், அது காப்பியமாயினும் சரி, தனிப்பாடலாயினும் சரி, ஒரு குறிப்பிட்ட கொள்கையை, குறிக்கோளை, பயனை, வலியுறுத்தவே ஆக்கப் பெற்றது. இலக்கிய இன்பம் என்ற ஒன்றைப் பெறுவதற்காக எந்த ஓர் இலக்கியத்தையும் இவர்கள் படைக்கவில்லை. - பயனில் சொல் பாராட்டு வானை மகன் எனல் மக்கள் பதடி எனல் (திருக்குறன்-196)