பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 83 (பயனில்லாத சொற்களைப் பேசுபவனை மனிதன் என்று கூற வேண்டா. மனிதர்களுக்கிடையே வாழும் மனித உருவம் படைத்த பதர் (கருக்காய்) என்று கூறுக.) என்பது, இந் நாட்டு அறநூல் விதி. பயனில்லாத சொல்லைப் பேசக்கூடாது எனில், பயன் விளைக்காத ஒரு பாடலையோ அன்றிக் காப்பியத்தையோ செய்வது இந்நாட்டு மரபன்று. இன்பம் அடைவதும் பயன்தானே என்றால், அந்த இன்பம் மூலமாக மானிட வாழ்க்கையில் ஒரு திருப்பம் அல்லது மாற்றம் ஏற்படவேண்டும் என்று இவர்கள் கருதின்ார்கள். இலக்கியம் இன்பம் தரக்கூடாது என்று இவர்கள் கூறவில்லை. ஆனால் ஒரு சில மணி நேரம் இருந்து மறையும் இன்பத்துக்காக, ஒர் இலக்கியம் தோன்றலாம் என்பதை இவர்கள் வன்மையாகக் கண்டித்தனர். இதற்கு அடிப்படையான ஒரு காரணம் உண்டு. பிறப்பினுள் உயர்ந்த மனிதப் பிறப்பை எடுத்தவன் இன்பம், துன்பம் என்ற இரண்டிலிருந்தும் விடுபட வேண்டும்; சமநோக்குப் பெற வேண்டும், என்பதே இவர்கள் கொள்கை இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான் துன்பம் உறுதல் இலன் (திருக்குறள்-62) இன்பத்தை விரும்பி நாடிச் செல்லாமலும் துன்பத்தை இயல்பு என்று ஏற்றுக்கொண்டும் வாழ்பவன், துன்பம் அடைதல் இல்லை.) - இதன் காரணமாக இன்பமூட்டும் இலக்கியம் என்ற எதனையும் இவர்கள் ஏற்கவில்லை. ஆகவே மேனாட்டுத் திறனாய்வின் அளவுகோலைக் கொண்டு கம்பன் போன்றவர்களை அளவிட முயல்வது சரியன்று. புதிய ஆராய்ச்சி பாரகாவியம் இயற்றப்புகும் ஒருவன், அதற்கு முன் இருந்த காப்பியங்களையும், அவை இயற்றப்பட்ட