பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கம்பன் - புதிய பார்வை حصصيجيصصحد விதத்தையும் கண்டு, அவற்றை முன்மாதிரியாகக் கொள்வதில் தவறு இல்லை. . - சிலப்பதிகாரம் பதிகம் என்ற பெயரில் இளங்கோ என்ன குறிக்கோளுடன் தம் காப்பியத்தை இயற்றினர் என்பதைக் கூற முற்படுகிறது. அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பது உம் . - (சிலம்பு, பதிகம், 55–57. நிலைநாட்டவே சிலப்பதிகாரம் என்ற பெயரால் ஓர் பாட்டுடைச் செய்யுளை யாக்க முற்ப்டார் என்று கூறுகிறது. அடுத்து நூலில் என்ன என்ன காதைகள் இடம் பெறும் என்பதையும் அது கூறுகிறது. அடுத்துத் தோன்றிய மணிமேகலையும், பதிகம் என்ற பெயரில் நூலின் உள்ளுறை எவை எவை என்பதை வரிசைப்படுத்திக் கூறுகிறது. பவத்திறம் அறுக எனப் பாவை நோற்ற காதை போல்வன நீதிகளை வரிசைப் படுத்திப் பேசத் தொட்ங்குகின்றன. சிலப்பதிகாரமும், இறுதிக் காதையாகிய வரந்தரு காதையில், ஏறத்தாழ இருபது அடிகளில் நீதி புகட்டத் தொடங்கிவிடுகிறது. காப்பியத்தை ஆக்கப் புகுமுன் உள்ளுறை எழுதிக் காட்டுவது அவ்வளவு பொருத்தமானதா என்பதும் சிந்திக்க வேண்டுவதேயாகும், ஒரு வேளை காப்பியத்தைப் பாடி முடித்த பிறகு, இக்காலத்தார் உள்ளுறை என்று முதலில் எழுதிக் காட்டுவதுபோல, அக் காலத்தில் செய்தும் இருக்கலாம். அவ்வாறு கொள்வதில் உள்ள இடையூறு என்ன என்றால் வாழ்த்தும் இப்பதிகத்தில்தான் இடம்பெறுகிறது. கடவுள் வாழ்த்தோ அன்றிச் சிலம்பைப் போல இயற்கை வாழ்த்தோ பாடாமல், ஒருவன் நூலைப்