பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 85 - பாடிவிட்டு வாழ்த்தையும் பதிகத்தையும் இறுதியில் பாடினான் என்பதும் பொருத்தமாக இல்லை. - அடுத்தபடியாக நூல் செய்கின்றவன், தான் கூறவந்த விழுப்பொருள்களைக் காப்பியத்துள் புதைபொருளாக வைத்தால்தான் அழகுடையது. முந்திரிக்கொட்டை போலத் துருத்திக்கொண்டு நிற்குமாறு, அவற்றை முன்னே கறுவதும் அழகுடையதாகத் தெரியவில்லை. கம்பனுக்கு முன்னோடியாக உள்ள இரண்டு காப்பியங்களிலும் பதிகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் கம்பநாடனுக்கு, இவ்வாறு பதிகம் என்ற பெயரில் நூலின் திரண்ட குறிக்கோளை முன்கூட்டிச் சொல்வதும், உள்ளுறையை வரிசைப்படுத்திக் கூறுவதும் ஏற்புடைய தாகப் படவில்லை. கம்பனுக்குப் பின்னர்த் தோன்றிய சிந்தாமணி பதிகம் என்ற பெயரில் உள்ளுறை கூறுகிறது. எனவே கம்பனுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ள மரபைக் கம்பன் ஏற்கவில்லை. நெடும் பாடல்களையுடைய நூலுக்குரிய இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் தோல் என்ற ஒன்றைக் குறிப்பிடுகிறது. இழும் என்மொழியால் விழுமியது நுவலினும் பரந்த மொழியான் அடிநிமிர்ந்து ஒழுகினும் தோல் என மொழிய-தொன் மொழிப்புலவர் . . . . . தொல், செய்யுளியல், 230) ..(மெல்லென்ற சொல்லால் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் விழுப்பொருள் பயப்பச் செய்யினும், ஆசிரியப் பாவால் ஒரு கதை போல் தொடுக்கப்பட்டாலும் அவற்றைத் தோல் என்று புலவர் கூறுவர்.) - இவ்வாறு கூறுவதால் தொடர்நிலைச் செய்யுளையும் அவை விழுப்பொருள் பற்றியனவாக அமைய வேண்டும் என்பதனையும் இத் தமிழர் அன்றே கண்டு கூறியுள்ளனர் என்பதை அறியலாம். எத்துணை விழுப்பொருளைக்