பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 + கம்பன் - புதிய பார்வை یحیحتیسیسم------- கூறினாலும் நேரிடையாகச் சிலம்பைப்போல் கூறினால், அது நீதிநூல் போலாகிவிடும். எனவேதான் முன்னோர் சென்ற வழியைக் கம்பன் மேற்கொள்ளவில்லை. கம்பனின் கடவுள் வாழ்த்து அவன் தன் காப்பியத்துள் கூற முயன்ற விழுப் பொருள்கள் பல. அவற்றுள் முதலாவது பரம்பொருளை ஒரு குறிப்பிட்ட சமயம் எனும் குறுகிய வட்டத்துள் அடைக்கக்கூடாது என்பதாகும். இதனால்தான் கடவுள் வாழ்த்துக் கூறவந்த அப் பெருமான் உலகம் உள்ளளவும் எந்தச் சமயத்தாரும் விரும்பி ஏற்றுக் கொள்ளக்கூடிய முறையில் தன் வாழ்த்தை அமைக்கின்றான். இதற்கு அவனுக்கு வழிகாட்டியாக அமைந்தவர் திருவள்ளுவர். உலகம் யாவையும் தாம்.உள ஆக்கலும் நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா அலகிலா விளையாட்டு உடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே! r - - - (பாயிரம்-) இந்த நாட்டில் தோன்றிய பழம்பெரும் சமயங்களாகிய சைவம், வைணவம் இரண்டும் உலகம், உயிர், இறைவன் என்ற மூன்றும் என்றும் உள்ளவை என்ற நம்பிக்கை உடையவை. அதற்கேற்பப் புலவன், உலகங்கள் அனைத்தையும் இப்பொழுதுள்ள வடிவில் படைத்தலை யும், காத்தலையும், அழித்தலையும், என்றும் முடிவில்லாத விளையாட்டாக உடையவர் யாரோ, அவரே தலைவர். அன்னாருக்கு நாங்கள் அனைவரும் அடைக்கலமாவோம் என்று கூறுகிறான். உள்ளது போகாது இல்லது வாராது என்ற கொள்கையைச் சற்காரிய வாதம் என்று கூறுவர். கம்பனும் இதனைப் பின்பற்றுபவன் என்பதைப் பின்னருங் காணலாம். எனவே படைத்தல் என்பதைச் சூக்குமமாக உள்ள நிலையிலிருந்து பருப்பொருளான நிலைக்கு மாற்ற