பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 87 லையும், நீக்கலும் என்பதற்கு பருப்பொருள் நிலைமாறி சூக்கும நிலைக்குச் செலுத்துதலையும் பொருளாகக் கொள்ள வேண்டும். அதனால்தான் 'உள ஆக்கல்' என்று கவிஞன் கூறுகிறான். சோறு ஆக்கினான் என்றால் முன்னர் அரிசியாக இருந்த ஒன்றைச் சோறாக ஆக்கினான் என்றுதானே பொருள். நீத்தார் பெருமை இதனை அடுத்துள்ள பாடலும் நன்கு கவனிக்கப்படல் வேண்டும். சிற்குணத்தர் தெரிவு அரு நல்நிலை எற்கு உணர்த்த அரிது! எண்ணிய மூன்றனுள் முற்குணத் தவரே முதலோர்; அவர் - நற்குணக் கடல் ஆடுதல் நன்று அரோ --. (பாயிரம்-2) (சித் என்று கூறப்படும் அறிவைப் பெற்ற ஞானிகளும் அறிந்துகொள்ள முடியாத அந்த உயர்ந்த நிலையை என்னால் கூற இயலாது. ஆராய்ந்து மூன்று என்று கணக்கிடப்பட்ட குணங்களும் (சத்துவ குணம், இராஜச குணம், தாமச குணம்) முன்னர் கூறப்பெற்ற சத்துவகுணம் உடையவர்களே முதலாவதாக எண்ணத்தக்கவர்கள். அத்தகைய பெருமக்களுடைய நற்குணமாகிய சத்துவத்துடன் தொடர்பு கொண்டு திளைத்தல் நன்மை பயக்கும். - - - - - இப்பாடலின் பின் இரண்டு அடிகளையும் மாற்றி முற்குணத்தவனே முதலோன் என்று பாடங் கொண்டு சத்துவ குணனாகிய திருமால் என்று வைணவப் பெருமக்கள் உரை கூறுகின்றனர். கம்பநாடன் மூவர்க்கும் மேம்பட்ட பரம்பொருளையே குறிக்கிறான் என்பதைப் பின்னர்க் காணலாம். சைவ, வைணவப் போராட்டத்தை தவிர்க்க வேண்டும் என்ற கொள்கையை முதல் விழுப்