பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கம்பன் - புதிய பார்வை பொருளாகக் கொண்டவன் இவ்வாறு கூறமாட்டான் என்பது தெளிவு. மேலும் குறளை அடியொற்றிப் பாடுகின்றவன் ஆதலின், கடந்த பொருளுக்கு வாழ்த்துக் கூறியபின், குறள் நெறியில் சென்று குணம் என்னும் குன்றேறி நின்ற பெரியவர்களைப் பற்றிப் பேசுகிறான். மனிதன் முக்குண வயத்தன் ஆயினும், பெரியோர்கள் சத்துவ குணத்தை உடையவர்கள். அவர்களைப் பற்றிப் பேசுவதும் அவருடன் இணங்கி இருப்பதும் நன்மை பயக்கும் என்று நீத்தார் பெருமை பேசுகிறது. இப்பாடல், முதல் இரண்டு அடிகளில் குணங்கடந்த பொருளின் நிலையை ஞானிகளும் அறிந்து கூற முடியாது என்று கூறுபவன், பெரியாரைத் துணைக்கோடல் வேண்டும் என்ற கருத்தைப் பின் இரண்டு அடிகளில் குறிக்கிறான். இறப்ப உயர்ந்ததாகிய அப் பொருளை ஞானிகளும் அறிய முடியாது என்றால், நம் போன்றோர். அதுபற்றி அறிய முயல்வது இயலாத காரியம். அப்பொருளை அறியவே முடியாது எனில், அதனுடன் நெருங்கிப் பழகுதல் நடவாத காரியம். நெருங்கினால் ஒழிய மனிதன் பயன்பெற முடியாது. அப்படியானால் வேறு வழி யாது? அப் பொருளை ஒரளவு அறிந்துகொள்ளக் காரணமான சத்துவகுணம் உடைய பெரியோர்களின் தொடர்பு நன்மை பயக்கும் என்ற அருங் கருத்தைக் குறளைப் பின்பற்றிக் கம்பநாடன் பேசுகிறான். - இனி மூன்றாவதாக உள்ள கடவுள் வாழ்த்துப் பாடலையும் காண்போம். - - ஆதி அந்தம் அரி என யாவையும் ஒதினார், உலகு இல்லன, உள்ளன. வேதம் என்பன-மெய்ந் நெறி நன்மையன் பாதம் அல்லது பற்று இலர்-பற்று இலார் w - - (பாயிரம்-3)