பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 89 (அலகு என்ற அளவு இல்லாதனவும், என்றும் உள்ளனவுமாகிய வேதம் என்பனவற்றை ஆதியினும், அந்தத்திலும் அரி ஒம் என்று கூறி ஒதினவர்கள், சத்தியப் பொருளாகவும், நலஞ் செய்பவனாகவும் உள்ள கடவுளது பாதங்களை அல்லது வேறு பொருளினிடத்துப் பற்று வைக்காமல், அத்திருவடிகளையே பற்றிக் கொள்வர்) இரண்டாவது பாடலில், சத்துவகுணமுடைய பெரியோரைப் பற்றி நிற்றல் வேண்டும் என்று கூறிய கவிஞன், கற்றவர் பற்றிப் பேசுகிறான். அளவில்லாதன வாகிய வேதங்களைப் பயில்கின்றவர்கள், அக் கல்வியின் பயனாக மெய்ந்நெறி ஆனவனும், நலஞ்செய்பவனுமாகிய இறைவன்ே பற்றுக்கோடு என்பதை அறிந்து அவனிடம் சரணம் புகுகின்றனர் என்று பேசுகிறான். முதற்பாடல் கடவுள் பற்றிக் கூறி, மனிதன் அவனிடம் சரணம் புகுவதே முறை என்பதனை வலியுறுத்திற்று. இரண்டாவது பாடல் இறைவனுக்கு அடுத்த நிலையில் உள்ள ஞானிகள், சித்தர்கள் என்பவர்களாகிய பெரி யோர்கள் பற்றிக் கூறி, மானிட் சமுதாயம் அவர்கள் பற்றி அறிவதும் சிந்திப்பதும் பயனுடைய செயலாகும் என்று கூறிற்று. மூன்றாவது பாடல் கல்வி ஒன்றின் மூலமாக அறிவைப் பெருக்கிக்கொள்ள முயலும் மனிதர்கள் பற்றிக் கூறி, அவர்கள் கல்வி உண்மையானதாக இருப்பின், மெய்ந்நெறி நன்மையனாகிய இறைவன் திருவடிப்பற்று உடையவர்களாக இருத்தல் வேண்டும் என்று கூறிற்று. இம் மூன்று பாடல்களும் மூன்று குறள்களை மனத்துட் கொண்டு பாடப் பெற்றவை என்பதை எளிதில் அறியலாம். - - மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார் - . (திருக்குறள்-3)