பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 + கம்பன் - புதிய பார்வை நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் (திருக்குறள்-28) கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் (திருக்குறள்-2 என்ற குறள்களுடன் கடவுள் வாழ்த்து, நீத்தார் பெருமை என்ற இரண்டு அதிகாரங்களின் முழுக் கருத்தும் இம் மூன்று பாடல்களில் இடம் பெற்றிருப்பதை அறியலாம். இறைவன் பெருமை, அடியார் பெருமை, கற்றவர் கடமை, என்ற மூன்றையும் கடவுள் வாழ்த்து என்ற தலைப்பில் கூறிவிடுகிறான் கவிஞன். கடவுள் வாழ்த்துப் பகுதியில், வாழ்த்துடன் மனிதனுக்கும், கடவுளுக்கும் உள்ள தொடர்பைக் கூறி, மனிதன் கடமை என்ன என்பதையும் உணர்த்திய பெருமை கம்பனுக்கே உண்டு. அவை அடக்கம்-வினா? இனி அடுத்து வருகின்ற பகுதி அவையடக்கம் என்ற தலைப்பில் உள்ளது. அவை அடக்கம் என்பது சிலம்பிலோ, மேகலையிலோ காணப்படாத ஒன்று. 10ஆம் நூற்றாண்டில் தோன்றிய சீவக சிந்தாமணியில் இடம் பெறும் இப்பகுதி எப்பொழுது தமிழ் இலக்கியத்தில் புகுந்தது என்பதை அறிய முடியவில்லை. இன்று கம்பனது இராமாயணம் என்ற நூலில் காணப்பெறும் பாடல்கள் அனைத்தையும் அவனுடையவை என்று ஏற்பதற்கில்லை. ஆசிரியர் குழு ஒன்று இந்நூலின் மிகுதியான ஏடுகளில் காணப்படும் பாடல்களை மட்டும் எடுத்து நூலாக்கியுள்ளது. சென்னைக் கம்பன் கழகத்தார் வெளியிட்ட இப்பதிப்பில் அவையடக்கம் என்ற பகுதியில் 6 பாடல்கள் உள்ளன. இவற்றுள் இரண்டு பாடல்களில் வான்மீகி பற்றி விளக்கக் குறிப்பாகவும், ஒரு பாடலில் சற்றுக் குறிப்பாகவும் பேசப்படுகிறது. 政影舜要邻é家s翻函sss*当哆é部经的歌é**令மாக்கதை செய்த - செய்தவன் சொல் நின்ற தேயத்தே (பாயிரம்-5)