பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 91 பொய்இல் கேள்விப் புலமையினோர் புகல் தெய்வ பாக்கவி மாட்சி தெரிக்கவே (பாயிரம்-) தேவை பாடையிள் இக்கதை செய்தவர் மூவர் ஆனவர் தம்முளும் முந்திய நாவினான் உரையின்படி நான்தமிழ்ப் - பாவினால் உணர்த்திய பண்பரோ (பாயிரம்-10) முதலிரண்டு பாடல்களைக் கொண்டு வான்மீகியைத் தான் கவிஞன் குறிக்கின்றான் என்பதை ஊகிக்க முடிகின்றது. சொல் நின்ற தேயம் என்பதால், வான்மீகம் தவிர வேறு யார் இயற்றிய இராமாயணமும் நாடு முழுதும் பரவி இருக்கவில்லை. தெய்வ மாக்கவி' என்று கூறும் அடைமொழியும் நாரதரால் உந்தப்பெற்று வான்மீகி பாடினார் என்பதை வலியுறுத்தவும், அப்பெருமகனார் தவமுனிவர் என்பதை அறிவுறுத்தவும், பயன்படுத்தப் பெறுகின்றன. ஆனால் மூன்றாவது கவிதை சற்று ஐயத்தைத் தருகிறது. வான்மீகிக்கு நன்றி சொல்வது சரி. 5, 6ஆம் பாடல்கள் தொடர்ந்து வருதலின் ஒரே கருத்தை இருமுறை அழுத்தந் தருவதற்காகக் கவிஞன் பாடினான் என்று ஒரளவு அமைதியடையலாம். இடையில் தன்னடக்கம் தெரிவிக்கும் முறையில் 7, 8, 9 ஆகிய மூன்று பாடல்களைப் பாடிய பிறகு மறுபடியும் தேவ பாடையின் இக் கதை என்று தொடங்குவது தலையாய கவிஞன் எவனும் செய்யக்கூடியதன்று. மேலும் 'நான் என்ற சொல்லாட்சியும், இன்னார் என்று கூறாமல் மூவர் என்று குறித்துச் செல்வதும் இது இடைச்செருகலோ என்று ஐயுற வைக்கின்றது. வான்மீகத்திலிருந்து பலவிடங்களினும் கம்பன் மாறிச் செல்வதனால் இவன் வான்மீகிக்குக் கடன்படவில்லை என்று யாரேனும் கூறிவிடுவார்களோ என்று அஞ்சிய பிற்காலப் புலவர் ஒருவர் இதனை இயற்றிச் சேர்த்திருக்கலாமோ என்று எண்ணத்