பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 + கம்பன் - புதிய பார்வை தோன்றுகிறது. இப்பாடலைச் செய்த பெருமகனாரே மறுபடியும் வான்மீகியின் பெயர் வெளிப்படையாக இதில் அமையவில்லை என்று கருதினார் போலும்! மறுபடியும் ஆற்றுப் படலத்தை விட்டுவிட்டு அடுத்துள்ள நாட்டுப் படலத்தில் வான்மீகியின் பெயர் வெளிப்படையாகத் தெரியும்படி ஒரு பாடல் பாடியுள்ளார். வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான் தீம்கவி செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான் ஆங்கு அவன் புகழ்ந்த நா அன்பு எனும் நறவம் மாந்தி மூங்கையான் பேசல் உற்றான் என்ன, என் மொழியல் உற்றேன். - - - (நாட்டுப் படலம்-) (அவன் அடிகளில் ஒன்றை மாற்றிவிட்டு வேறு பதிலாகப் பாடி வைக்க முடியாத நான்கு பாதங்களுடைய பாடல்களால், தேவரும் கேட்டு இன்பமடையச் செய்தான் வான்மீகி என்பான். அவன் புகழ்ந்த நாட்டை ஊமை பேசத் தொடங்கியது போல் நானும் பாடத் தொடங் கினேன்.) - - - இப்பாடலில் இரண்டு புதுமைகள் உள்ளன. இப்பாடலைப் பாடியவர் வான்மீகத்தில் பழக்கம் இல்லாதவர் போலும். தன் மூலத்தின் அளவுக்கும் அதிகமாகச் செருகு கவிதை களைப் பெற்றுள்ள வான்மீகத்தை வாங்கரும் பாதம் என்பது விந்தையே. அதைவிடப் புதுமை ஒன்றையும் Dr. S. இராமகிருஷ்ணன் தம் 'கம்பனும் மில்டனும் என்ற நூலின் 78ஆம் பக்க அடிக்குறிப்பில் "முனிவர் புகழ்ந்த நாட்டைத் தான் பாடுவதாகத் தோற்றுவாய்ச் செய்யும் கம்பன் 61 பாடல்களில் நாட்டுப் படலம் அமைக்க, முனிவரோ ஒரே ஒரு சுலோகத்தில் நாட்டைச் சொல்லி