பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<母。卒。 ஞானசம்பந்தன் + 93 விட்டு நகரத்தைச் சித்திரிக்கப் புகுவார்!’ என்று கூறுகிறார். எனவே, இந்தப் பாடலை நமக்கு வழங்கிய பெரியாருக்கு வான்மீகி பற்றியோ அவன் பாடல்களைப் பற்றியோ ஒன்றும் அதிகம் தெரியாது என்பதை ஊகிக்கலாம். Dr. S.இராமகிருஷ்ணன் அவர்கள் அப்பாடல் கம்பனுடையது என நம்புவதால், கவிஞ்ன் தன்னையும் அறியாமல் இந்த வினோதத்தைக் கூறுகிறான் என்கிறார். . . . இதனை இவ்வளவு விரிவாக ஆராயக் காரணம் ஒன்று உண்டு. பழங்காலத்திலிருந்தே, கம்பனை, வெறும் பக்தி நூல் ஒன்றை (அதுவும் வைணவ நூலை இயற்றியவனாகக் கருதினார்களே தவிர அவன் செய்த புரட்சியை அறிந்து கொள்ள முயன்றதாகத் தெரியவில்லை. அவனுடைய காலம் வரையில் தோன்றிய எந்தத் தமிழ் நூலும், பாடல்களும் செய்யாத சில புரட்சிகளை, அப்பெருமான் இராம காதையைக் கூறுமுகமாகவே சாதித்துவிடுகிறான். அவற்றுள் ஒரு சிலவற்றைச் சற்று விரிவாகக் காண்பதே இனி அடுத்துவரும் பகுதிகளின் நோக்கமாகும். வைணவ சமயத்தை வளர்க்கவோ, திருமால் பக்தியைப் பெருக் கவோ, அவன் காப்பியம் இயற்றவில்லை, ஆழ்வார்கள் அருளிச் செயல்கட்கு அப்பால் அவர்களை அடுத்த காலத்தில் தோன்றிய ஒரு கவிஞன் எத்துணைச் சிறந்தவனாயினும் அவர்களை மிஞ்சும் வகையில் ஒன்றும் செய்துவிட முடியாது. இதனை அவன் நன்கு அறிவான். எனவே, சமயப் பரப்புக்கு உதவல் என்பது அவன் கருத்தன்று. . . . . * . . தொடக்கத்திலிருந்தே இத் தமிழ்ச்சாதி விழித்தெழுந்து ஒரு சில கொள்கைகளை, குறிக்கோள்களை மேற்கொள்ள வேண்டும் என்பதே அவன் தலையாய நோக்கமாகும்.