பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 95 இருக்கிறார்களோ அங்கேதான் நல்ல நாடு என்ற பெயரும் நிலைக்கும்" என்ற இந்த ஒளவையாரின் வாக்குக் கம்பனுக்கு ஒரு கற்பனையைத் துாண்டிற்று. அவன் காலம் வரையில் தமிழகம் இருந்த நிலை முன்னர்க் கூறப்பெற்றதல்லவா? இந்நிலை மாறவேண்டும் என்று கம்பன் நினைக்கின்றான்; இந்தச் சங்கப் பாடல் அவன் சிந்தனையைத் துண்டுகிறது. ஒரு சிறந்த நாட்டின் மக்கள் எவ்வாறு இருக்க வேண்டும்? நல்லவர்களாக இருத்தல் வேண்டும் என்ற விடையில் யாரும் வேறுபாடு கொள்ள மாட்டார்கள். ஆனால் நல்லவர்கள் என்ற சொல்லுக்குப் பொருள் யாது? தனித்தனியாக நற்குணங் களை அடுக்கி இவை அனைத்தையும் ஒருசேரப் பெற்றவர்கள் நல்லவர்கள் என்று கூறிவிடலாம். ஆனால், அதிலும் ஒரு தொல்லை தோன்றுகிறது. இந்த நற்குணங்கள் எவ்வாறு இவர்கள்பால் வந்தன. சமய சந்தர்ப்பத்திற் காகவோ, வேறு வழி இல்லாமலோ, அன்றி ஏதோ ஒருமுறை அத்தி பூத்தது போலவோ சில நற்குணங்களைச் சிலர் பெற்றுத் திகழ முடியும். ஆனால் அடித்தளம் இல்லாத அந் நற்குணங்கள் சூழ்நிலை மாறியதும் விடை பெற்றுச் சென்றுவிடும். கம்பன் கூறும் புலனடக்கம் நற்பண்புகள் தனிமனிதனிடமோ, அன்றி வேறு ஒர் இனத்திடமோ நிலைத்து நிற்க வேண்டுமாயின், அவனோ அல்லது அவர்களோ மனத்தை அடக்கிப் பழகியவர் களாய் புலனடக்கம் உடையவர்களாய் இருத்தல் வேண்டும். புலனடக்கம் ஒன்றுதான், மனிதனை மகாத்மாவாக மாற்றும் சக்தி வாய்ந்தது. இப்புலனடக்கத் தின் பெருமையை நம் காலத்து வாழ்ந்த மகாத்மா காந்தி விரிவாக எடுத்துப் பேசியதுடன் இதைக் கடைப்பிடிக்கவும் செய்தார். அவருடைய புலனடக்கம் காரணமாகத்தான்