பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 + கம்பன் - புதிய பார்வை அவருக்கு ஒரு பெரிய பேரரசையே எதிர்த்து வெல்லும் ஆற்றல் வந்தது. - - உரன் என்னும் தோட்டியால் ஒர் ஐந்தும் காப்பான் : வரன் என்னும் வைப்பிற்கு ஒர் வித்து (திருக்குறள்-24) (அறிவு என்னும் வலிய அங்குசத்தால் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளாகிய யானைகளை எவன் அடக்கி, அவற்றிற்குரிய புலங்கள்மேல் (சுவ்ை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்) செல்லாமல் காக்கின்றானோ அவன் எல்லா நிலங்களிலும் மேம்பட்ட நிலம் என்று கூறப்பெறும் வீட்டு நிலத்திற்கு (மோட்ச சாம்ராஜ்யத்திற்கு) ஒரு விதையாவான்.) - இதனுடன் வள்ளுவன் நிறுத்தினானல்லன். ஐந்து புலன்களையும் அடக்கியவர்களையும் ஒப்பிட்டு ஒரு குறள் கூறுகிறான். . - - ஐந்து புலன்கள் மேல் செல்லும் ஐந்து வகையான ஆசைகளையும் அடக்கினவனுடைய வலிமை எத்தகையது என்று அறிய வேண்டுமா? பெரிய வானத்தில் வாழும் தேவர்கள் தலைவனாகிய இந்திரனே சான்றாவான் என்ற பொருளில், . - - ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்புளர் கோமான் இந்திரனே சாலும் கரி - (திருக்குறள்-75) என்று கூறுகிறான். பெறுதற்கரிய இந்திர பதவியைப் பெற்றுங்கூடப் புலனடக்கம் இன்மையால் உடம்பெல்லாம் கண்ணாகப் பெறும் சாபத்தை அடைந்தானல்லவா? ஐந்து அவித்த கோதமன் சாபம் கொடுப்பதும் ஐந்தை அடக்காத இந்திரன் சாபத்திற்கு ஆளானதும் தக்க சான்று அல்லவா? கோசல மக்கள் தலையாய பண்பு இவற்றை மனத்துட் கொண்ட கம்பநாடன், தான் கூறப்போகும் கோசல நாட்டைப் புலனடக்கமே குறிக்