பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 97 கோளாகக் கொண்ட மக்களால் நிரப்புகிறான். காப்பியத் தலைவனையோ அன்றித் தலைவியையோ புலனடக்கத் திற்கோ, அல்லது உயர்ந்த பண்பிற்கோ, உறைவிடமாகக் கூறும் நூல்கள் கம்பனுக்கு முன்னும் உண்டு; பின்னும் உண்டு. ஆனால் ஒரு நாடு முழுவதும் புலனடக்கமுடைய மக்களால் நிரம்பி இருந்தது என்ற புதிய கருத்தை முதன்முதலில் காப்பியத்திற் புகுத்தியவன் கம்பனே ஆவான். ஆச லம்புரி ஐம்பொறி வாளியும் காசு அலம்பு முலையவர் கண்னனும் பூசல் அம்பும் நெறியின் புறம்செலாக் கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம் r (நாட்டுப் படலம்-1) (குற்றத்தையும் துன்பத்தையும் செய்கின்ற ஐந்து பொறிகள் என்னும் அம்புகளும், மாலை அணிந்த பார்வையுடைய மகளிரின் காமப்போர் தொடுக்கின்ற கண் எனும் அம்பும், தீய வழியில் செல்லாத மக்கள் நிறைந்த கோசல நாட்டிலுள்ள ஆற்றின் பெருமையைக் கூறுவோம்.) மக்கள் இனம் முழுவதும் ஆடவர், பெண்டிர் என்ற இரு பகுப்பினுள் அடங்கும். கோசல நாட்டிடை வாழும் அனைவருமே புலனடக்கத்தில் தலைசிறந்து நிற்கின்றனர் என்று பேசுகிறான் கவிஞன். அதினும் ஒரு துணுக்கத்தைப் பெய்து பேசுகிறான். ஐம்பொறிகளாகிய அம்புகள் என்று கூறினவுடனேயே கண்ணாகிய பொறியும் அதனுள் அடங்கிவிடுமே? அவ்வாறு இருக்க, ஐம் பொறி வாளியும் 'கண் எனும் பூசல் அம்பும் என மறுபடியும் கண்ணை வேறு பிரித்துக் கூற வேண்டிய இன்றியமையாமை யாது? என்ற வினா நியாயமானதே. ஆழ்ந்து சிந்தித்தால், மற்ற நான்கு பொறிகளினும் மெய், வாய், மூக்கு, செவி) கண் வேறுபட்டது என்பது விளங்கும். இந்த நான்கு பொறிகளும் அவை இருக்கும் இடத்திற்கு அவற்றின் புலன்களான ஊறு மெய்), சுவை (வாய், நாற்றம் மூக்கு,