பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 + கம்பன் - புதிய பார்வை ஒசை (செவி) என்ற நான்கு புலன்களுக்கும் இடமான பொருள்கள் நெருங்கி வந்தால்தான் இந்தப் பொறிகள் அவற்றைப் பற்றிக்கொள்ளும். ஆனால் க்ண்ணாகிய பொறி மிக நீண்ட தூரத்தில் இருக்கும் பொருள்களையும் தானே சென்று பற்றிக்கொள்ளும். அதனாலேயே சிவஞான போதத்திற்கு மாபெரும் உரை வகுத்த மாதவச் சிவஞான சுவாமிகள், அந்த நான்கு பொறிகளையும், நின்று பற்றும் பொறி என்றும் கண்ணை மாத்திரம் சென்று பற்றும் பொறி என்றும் கூறினார். அதனால்தான் கவிஞர் பிரான் கண்ணை மட்டும் தனியே எடுத்து விதந்து கண் எனும் பூசல் அம்பும் என்று கூறுகிறான். மகளிர் கண் - இனிக் கண்ணை மட்டும் தனியே எடுத்து விதக்க வந்த கவிஞன் பொதுவாகக் கண் என்று கூறாமல் காசு அலம்பு முலையவர் கண் எனும் பூசல் அம்பு என்று ஏன் கூற வேண்டும்? அப்படியானால் ஆடவர் கண்கள் இத் தவறைச் செய்யாவா என்றால், அதிலும் ஒரு நுண்மையை வைத்துள்ளான் கவிஞன். மகளிர் கண்களைப் பற்றி வள்ளுவன் கூறியன ஆராயத்தக்கன. நோக்கினாள் நோக்கு எதிர்நோக்குதல் தாக்கு அணங்கு தானை கொண் டன்னது உடைத்து கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தால் பெண்தகை பேதைக்கு அமர்த்தன கண் (திருக்குறள்-1082, 1084) இத்தகைய நோக்கினை உடையவள், என் நோக்குக்கு எதிர்நோக்கம் செய்தல் இயல்பாகவே தாக்கி வருத்தும் அணங்கு ஒன்று படையையும் திரட்டிக்கொண்டு வந்தது போலாகும், . . பெண்தன்மை நிறைந்த இப்பேதைக்கு உளவாய கண்கள் தம்மைக் கண்டவர்களுடைய உயிரை உண்ணும் தோற்றத்துடன் அமர்ந்திருந்தன.)