பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 99 இங்கனம் தம் கண்களால் போர் தொடங்கி, எத்தகைய வீரனையும், தன் வீரத்தை மறந்து, உறக் கத்தையும் மறந்து செயற்படாமல் செய்யும் இயல்பு மாதரார் கண்கட்கே உரியன ஆகலின், அவர்கள் கண்கள் நெறியின்புறம் செல்லமாட்டா என்று கூறுகிறான். புலனடக்கம் பயின்றவர்கள் மட்டுமே மேலும் மேலும் பல பயிற்சிகளை மேற்கொண்டு, இறுதியில் யான், எனது. என்னும் செருக்கை அறுத்த பிறகு வீடுபேற்றை அடை கின்றனர். - . புலனடக்கம் உடையார் புகலிடம் நாடு முழுவதும் புலனடக்கம் பயிலும் மக்கள் நிரம்பியுள்ளனர் என்று கூறுவதோடு புலவன் அமைதி அடைந்து விடவில்லை. நகரப் படலத்தில் அயோத்தியின் சிறப்பினைக் கூறவந்த கவிஞன் மறுபடியும் புலனடக் கத்தை வலியுறுத்துகிறான். - தங்குபேர் அருளும், தருமமும், துணையாத் தம்பகைப் புலன்கள் ஐந்தும் அவிக்கும் பொங்கு மாதவமும், ஞானமும் புணர்ந்தோர் "யாவர்க்கும் புகலிடமான 姆夺景始胎姆哈姆角爆曼始哆始曲娜8如沙姆兔 锡峰郊伊幽இந்நகர் ~ . . . . . . (நகரப்படலம்-6) இயல்பாகப் புலனடக்கம் செய்பவர் நிறைந்துள்ள நாட்டில் யாரேனும் ஒருவர் புறநடையாக மனத்துக்கண் மாசு அடையப் பெற்றால், அவர்களை அந்நகரமே ஒறுக்கும் என்ற பொருளில், - š毫强罗s别இதம் அலநினைவார் - - மனத்தையும் எறியும் பொறி உள. நகரப்படலம்-12, (மனத்துக்கண் தவறான நினைவு தோன்றினால் அவர்களையும் தண்டிக்கும் கருவி அங்குளது.)