பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 + கம்பன் - புதிய பார்வை தசரதன் விருப்பம் புலனடக்கம் செய்வது எளிதன்று. ஆனால் ஒரு சிலர்க்கு திடீரென்று அவ்வெண்ணம் தோன்றலும், விடாப்பிடியாக அவர்கள் அதனைப் பற்றிக்கொண்டு, மேலே செல்லுதலும் உலக வாழ்க்கையில் நடைபெறக் கூடியன என்பதை நேரிலும் காண்கிறோம்; வரலாற்றிலும் படிக்கின்றோம். காதற்ற ஊசியையும் வறட்டித் துண் டையும் கண்ட மாத்திரத்தில், பெருஞ்செல்வத்தில் வாழ்ந்த திருவெண்காடர் ஒரே வினாடியில் அனைத்தையும் துறந்து விட்டுப் பட்டினத்துப் பிள்ளையாராக ஆன வரலாற் றையும் அறிவோம். இதேபோல அறுபதினாயிரம் மனைவி யரை மணந்து அத்துணைக் காலம் அரசோச்சிய தசரத னுக்குப் புலனடக்கத்தின்மேல் தணியாக் காதல் தோன்று வதைக் கம்பன் வலியுறுத்துகிறான்: மகனுக்கு முடிசூட்ட முனைந்த தசரதன், மந்திரக் கிழவர்களை ஒருங்குகூட்டிப் பேசத் தொடங்குகிறான். நம்குலக் குரவர்கள், நவையின் நீங்கினார் - வெங்குலப் புலன்கெட வீடு நண்ணினார் கள்ளரின் கரைந்து உறை காமம் ஆதி ஆம் உள்உறை பகைஞருக்கு ஒதுங்கி வாழ்வெனோ? எஞ்சல் இல் மனம் எனும் இழுதை ஏறிய அஞ்சு தேர் வெல்லும் ஈது அருமை ஆவதோ? (மந்திரப்படலம் 16, 17, 18) (குற்றத்தின் நீங்கிய என் முன்னோர்கள் கொடிய புலன்களை அடக்கியதால் வீடு பெற்றனர். திருடனைப் போல ஒளிந்துநின்று துன்பஞ் செய்யும் காமம் முதலாய பகைஞருக்குப் பயந்து வாழ்வேனோ? மனம் என்று சொல்லப்படும் பேய் ஏறிச் செலுத்தும் ஐம்பொறிகளாகிய தேர்களை வெல்வது எனக்கு எளிமையானதேயாம்.)