பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 101 தசரதனே புலனடக்கம் பற்றி இத்துணை விரிவாகப் பேசுகிறான். எனில், கவிஞன் தன் குறிக்கோளை நிறை வேற்ற எல்லாப் பாத்திரங்களையும் பயன்படுத்துகின்றான் என்பதை அறிய முடிகிறது. கோசல மக்கள் புலனடக்கம் நாட்டுமக்கள் புலனடக்கத்தில் பயில்கின்றார்கள் என்றால் அதன் பயனை எங்கெங்கெல்லாம் காட்ட முடியுமோ, அங்கெல்லாம் காட்டத் தவறவே இல்லை. புலனடக்கம் பயின்றவர்கட்கு அதன் பயனாகக் காமம், வெகுளி, மயக்கம், பற்றுள்ளம் (பேராசை என்பவை இல்லாமல் போகும். கோசல நாட்டு மக்களைப் பற்றிப் பேசவரும் புலவன் இவற்றை நினைவில் கொண்டே பேசுகிறான். அவர்கள் மண், பெண், பொன் என்ற மூன்று ஆசைகளையும் பெரிதும் துறந்தவர்கள். எது தமக்கு உள்ளதோ அதை வைத்துக்கொண்டு மன அமைதியுடன் வாழ்கின்றனர் என்கிறான். இதை நேரிடையாகக் கூறாமல் மறைமுகமாகப் பேசுகிறான் கவிஞன். "நீரிடை உறங்கும் சங்கு - நிழலிடை உறங்கும் மேதி தாரிடை உறங்கும் வண்டு தாமரை உறையும் செய்யாள் - (நாட்டுப்படலம்-6) |நீரில் சங்கும், நிழலில் எருமையும், மக்கள் அணிந் துள்ள மாலையில் வண்டும், தாமரை மலரில் இலக்குமியும் உறங்குகின்றனர்.3 இப்பாடலிலிருந்து மக்கள் போதுமென்ற மனத்துடன் வாழ்கிறார்கள் என்று எவ்வாறு கூறுவது? ஆம் கோசல எருமைகள்கூட உண்ட உணவு போதுமானது என்று கருதி. நீரிடைப்படுத்து உழக்காமல் நிழலிடை உறங்குகிறதாம்.