பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 + கம்பன் - புதிய பார்வை சரி! மக்கள் அணிந்த மாலையில் வண்டு உறங்குகிறது என்று கூறினால் என்ன பொருள்? அன்றலர்ந்த மலர் களால் மாலை தொடுக்கப்பட்டிருந்தால் அம்மலர்களில் உள்ள தேனைக் கருதி வண்டுகள் மொய்க்கும். அது அவர்களுடைய முருகியல் சுவையை (Aesthetic Sense) குறிக்கும். வண்டுகள் மாலையில் கட்டியுள்ள பூவில் உறங்குகின்றன என்றால் என்ன பொருள்? பூக்களை அணிந்தவர்கள் இங்கும் அங்கும் ஒடியாடி அலைந்து கொண்டிருந்தால் அவர்கள் அணிந்துள்ள மாலையும் ஆடி அசைந்துகொண்டே இருக்கும். ஆடிக்கொண்டிருக்கும் பூவில் வண்டு உட்காராது. அதிலும் அது உறங்க வேண்டும் என்றால், மாலை அணிந்தவர்கள் ஓயாமல் ஒடியாடித் திரியாமல் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்துள்ளனர் என்றுதானே பொருள். எப்பொழுது மனிதன் ஒடியாடித் திரிவான் ? மேலும் மேலும் பலவிடங்கள் சென்று பொருளைச் சேகரிக்க வேண்டும் என்று நினைப்பவன் தானே அங்குமிங்கும் ஒடி ஆடித் திரிவான்? கோசல மக்கள் எவ்விதச் சலனமுமின்றி ஒரிடத்தில் அமைதியாக உள்ளனர் என்றால், பொருள் சேகரிக்க வேண்டும் என்ற பேராசை இல்லாமல் அமைதியாகப் போதுமென்ற மனத்துடன் வாழ்கிறார்கள் என்பதுதானே பொருள்! மக்கள் மேலும் மேலும் பொருள் சேகரிக்க வேண்டும் என்ற பேராசையால் துரண்டப் பெற்றால், பொருளுக்குத் தல்ைவியாகிய இலக்குமி அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டுமென்ற கடமை காரணமாக இங்கும் அங்கும் அலைய வேண்டி வரும். ஆனால் கோசல மக்கள் போது மென்ற மனம் உடைமையின் திருமகளை விரும்பி அழைப்பார் யாரும் இலர் தன்னை யாரும் விரும்பி அழைக்கவில்லை என்பதால், இலக்குமியும் தன் உறைவிட மாகிய தாமரையில் உறங்குகிறாளாம். எனவே ஒரே அடியில் கோசல நாட்டு மக்களின் மன அமைதியைக்