பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 103 கூறுமுகமாக அவர்கள் புலனடக்கத்தில் வல்லவர்கள் என்ற தன் முதல் கூற்றுக்கு அரண் செய்துவிடுகிறான் கவிஞன். புலனடக்கம் என்ற அடிப்படையில் காவியத்தைத் தொடங்கினமையின், அதை மறவாமல் அங்கங்கே வலி யுறுத்திச் செல்கிறான். கோசல நாட்டை ஒரு கற்பனை நாடாகவும், அந்தச் சமுதாய மக்களைக் குறிக்கோள் வாழ்க்கை வாழும் மக்களாகவும் கற்பிக்கின்றான். அவனுக்கு முன்னும் பின்னும் தோன்றிய நூல்கள் தமிழக நிலைக்களத்தில் எழுந்தவை. சீவக சிந்தாமணி ஏமாங்கதம் என்னும் நாடுபற்றிக் கூறுகிறது. அதனை இயற்றிய திருத்தக்கதேவரும் ஏமாங்கத நாட்டைத் தமிழ்நாட்டை வருணிப்பது போலத்தான் வருணிக்கின்றார். ஆனால் கம்பன் தமிழகத்தின் மேல் கொண்டிருந்த நாட்டுப் பற்று ஈடு இணையற்றது. ஆகலின், - கோசலத்தைத் தமிழகத்தின் பிரதிபலிப்பாகவே படைக்கின்றான். - - கவிஞன் தமிழ்ப்பற்று இறையன்பைத் தவிரப் பிறிது ஒன்றுக்கும் இடங் கொடாத நாயன்மார்களும் ஆழ்வார்களுமே தம் தமிழ்ப் பற்றைப் பரக்கப் பேசியுள்ளனர் என்றால், கல்வியிற் பெரியனாகிய கம்பன் தமிழ்ப்பற்றுக் கொண்டிருத்தலை யும், அதனை வாய்ப்பு நேர்ந்தபொழுது வெளிப்படுத்தலை யும் புதுமை என்று நினைப்பதற்கில்லை. நிழல்பொலி கணிச்சி மணிநெற்றி உமிழ் செங்கண் தழல்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான் நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் என்றும் உளதென் தமிழ் இயம்பி இசை கொண்டான் (அகத்தியப் படலம்-4, 36, 47)