பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 + கம்பன் - புதிய பார்வை (ஒளிவிடுகின்ற மழுவையும், ஒளியுடைய நெற்றி யையும், சிவந்த கண்களையும், நெருப்புப் போன்று சிவந்த நிறத்தையும் உடைய சிவபெருமான் தந்த தமிழைத் தந்தவன். r . . 'உலகம் முழுவதையும் தமிழால் அளந்த அகத்தியன் ‘சாவா, மூவாக் கன்னித் தமிழைப் பேசி அதனால் புகழ் பெற்றவன்.) - . திருமால் உறையும் வேங்கட மலையைத் தென் மொழிக்கும், வட மொழிக்கும் வரம்பாம் என்பான். வடசொற்கும் தென் சொற்கும் வரம்பாகி ..........................வேங்கடம் (நாடவிட்ட படலம்-25) சுக்கிரீவன் பிராட்டியைத் தேடி தென் திசை செல்லும் படைகட்கு வழி கூறுவதாக உள்ள இடத்தில், தமிழ்ச்சங்கம் பற்றிப் பேசுகிறான். - - தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திருமுனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்பீரேல் என்றும் அவன் உறைவிடமாம் ஆதலினால் அம் மலையை இறைஞ்சி ஏகி. - - (நாடவிட்ட படலம்-3) (வானரர்கள் செல்லும் வழியில் தமிழ்நாட்டில் உள்ள பொதிகை மலையைக் காண நேரும். சங்கம் வளர்த்த தமிழ் முனிவன் அகத்தியன் என்றும் உறையும் இடம் அது. ஆதலால் அம்மலையை வணங்கிச் செல்க.) பல்வேறு வகை மக்கள் கவிஞன் கொண்ட தமிழ்க்காதல் தமிழ் இலக்கணமாகிய - தொல்காப்பியத்திலும் சென்று நிலைபெற்றது. எனவே தமிழகத்தில் சங்ககாலத்தில் வாழ்ந்த ஐவகை நில மக்களையும் கோசல நாட்டில் குடியேற்றுகிறான். கம்பன் வாழ்ந்த 9ஆம்