பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 105 நூற்றாண்டில் தமிழகத்தில் இந்த ஐவகை நிலப்பிரிவும் அதில் வாழும் மக்கள் பிரிவும் உறுதியாக இல்லை. அவ்வாறு இருந்தும் பழைய தமிழ் மரபை மனத்துட் கொண்டு இத்தமிழர் வாழ்வு முறையைக் கோசலத்தில் கவிஞன் குடி யேற்றியது எற்றுக்கு? நாட்டுப்படலத்தில் மூன்றாம் பாடல் முதல் 14ஆம் பாடல் வரை மருதநில மக்கள் வாழ்வு முறை விரிவாகப் பேசப்படுகிறது. 15, 16ஆம் பாடல்களில் அம்மக்கள் பொழுதுபோக்கு வகைபற்றிப் பேசும்பொழுது, அந்த மருத நிலத்தில் வாழ்ந்த கோசல் மக்கள் அனைவரும் ஒரேபடித் தான மனவளர்ச்சி உடையவர் அல்லர்; அவருள்ளும் சாதாரண மக்களிலிருந்து மனவளர்ச்சி அடைந்தவர் வரை நான்கு வகையான மக்கள் இருந்தனர் என்கிறான். பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்துவாரும் பருந்தொடு நிழல் சென்றன்ன. இயல் இசைப் பயன் துய்ப்பாரும் மருந்தினும் இனிய கேள்வி செவிஉற மாந்துவாரும் விருந்தினர் முகம்கண்டு - - அன்ன விழாஅணி விரும்புவாரும் - - - - . . . (நாட்டுப்படலம்-16) தமக்குப் பொருத்தமான மகளிருடன் மணஞ் செய்துகொண்டு அதில் பொழுதுபோக்குபவர்பருந்தைத் தொடரும் நிழலைப் போல இயலைத் தொடரும் இசையை அனுபவிப்பவர்- அமிழ்தத்தை விட உயர்ந்ததாகிய கேள்விச் செல்வத்தில் ஈடுபடுபவர்விருந்தினர் முகத்தைக் கண்டு உணவு தந்து அதனை விழா எனக் கருதி மகிழ்பவர். இங்குக் கூறப்பெற்ற முறையை மேனோக்கு முறை (Climax) என்று கூறுதல் வேண்டும். புதுமணத்தில் ஈடுபடுபவர் சாதாரண மக்கள்; அவரினும் உயர்ந்து