பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 கம்பன் - புதிய பார்வை மனவளர்ச்சி பெற்றவர் நுண்கலைகளுட் சிறந்த இயல் இசையில் ஈடுபடுகிறார்கள்; அவரினும் வளர்ச்சி பெற்ற வர்கள் உயிருக்கு உறுதி பயப்பதாகிய கேள்விச் செல்வத்தில் ஈடுபடுகின்றனர். - - செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை (திருக்குறள்-41) எனவே நன்கு மனவளர்ர்ச்சி யடைந்தவர் கேள்விச் செல்வத்தில் மூழ்கியுள்ளனர். என்றாலும் இந்த மூன்றும் தனக்கு மகிழ்ச்சியும், இன்பமும், ஞானமும் தரும்பொழுதுபோக்குகளேயாகும். எவ்வளவு படிப்படியாக உயர்ந் தவையாக இவை இருப்பினும் தன்னலத்தின் அடிப்படையில் நிற்பவைதாம். எனவே கவிஞன் நான்காவதாக ஒரு கூட்டத்தாரை அறிமுகப்படுத்துகிறான். அவர்கள் விருந் தினர்களை உபசரித்து அதில் இன்பங் காண்கின்றனர். மனிதனிடம் இயல்பாக அவன் பிறப்பிலிருந்தே தொடர்வது தன்னலம், அது ஒரளவு திருமணத்தில் விரிந்து, புதல்வரைப் பெறுதலில் இன்னுஞ் சற்று வளர்ந்து, அன்புடைமை அம்மனிதனுக்கு மலர்கின்றபொழுது விருந்து புரக்கின்ற நிலை ஏற்படுகிறது. எனவே, தன்னல அடிப்படையில் தோன்றும் இன்பத்தை வரிசைப்படுத்தி ஒன்றின் ஒன்று உயர்ந்ததாக உள்ளமையைக் கூறி, இறுதியாகத் தன்னலத் தியாகஞ் செய்பவர்களை நான்காவதாகக் கூறுகிறான் கவிஞன். - * . உழவர் வாழ்க்கை அடுத்து உழவர்கள், வறியவர்க்கு உதவி மிக்க விருந்துண மனையின் உய்ப்பார் (நாட்டு 20 என்று கூறும்பொழுது, வறியவர்க்கு ஈந்து என்று கூறாமல் உதவி என்று கவிஞன் கூறுவது ஆராயத்தக்கது. புலனடக்கத்தில் வளர்ந்து மன ஒருமைப்பாட்டைப் பெற்றவர்கள் பிறருக்கு ஈவதாக எதையும் கருதமாட்டார்கள். காரணம் ஈபவன் உயர்ந்தவன் என்றும்,