பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 107 ஏற்பவன் தாழ்ந்தவன் என்றும் ஆகிவிடும். எனவே கோசலத்தில் உள்ள மக்கள் தாம் செய்வதை ஈகை என்று கருதாமல் உதவி என்று கருதினார்களாம். கோசலம் கடல் பகுதி இல்லாத உள்நாடு என்பதைக்கூட மறந்துவிட்டுத் துறைமுகத்தில் கப்பல்கள் நிற்பதைப் பேசுகிறான். காரணம் தமிழ்நாட்டில் கடல்வாணிகம் உண்டு. எனவே கோசலத் திலும் அதனை ஏற்றிப் பேசுகிறான். நாட்டு-15). தெள்விளிச் சிறியாழ்ப்பானர்; கொடிச்சியர் இடித்த கண்ணம் குறிஞ்சி மக்கள்), எயினர்வாழ் சிறுார் (பாலை; மறிவிழி ஆயர்மாதர் முல்லை), கோள் நெறி கற்றிலாத நுளைச்சியர் (நெய்தல்) என்ற வகையில் ஐவகை நிலத்தையும் கோசலத்தில் வைத்துக் காண்கிறான் கவிஞன். திணைமயக்கம் என்று இலக்கணம் கூறும் ஒரு பகுதியும் உண்டு. அதனையும் விடாமல் பேசுகிறான். தமிழர் வாழ்க்கை முறையையும் கோசலத்தில் ஏற்றிக் காண்கிறான். அவ்வாறு செய்ய ஏதேனும் காரணம் இருக்குமோ என்று சிந்தித்தால் இலைமறை காயாகக் கவிஞன் க்ருத்தை அறிய முடிகிறது. பரத்தையர் இல்லா மருதம் ஆறு செல் படலத்தில், அங்கதன், அனுமன் முதலான வர்கள் பிராட்டியைத் தேடித் தென்திசை வருதலைக் கூறும் பகுதியில் அவர்கள் தமிழ்நாட்டில் புகுந்தனர் என்று கூற வருகிறான் கவிஞன், - வினையின் நீங்கிய பண்பினர் மேயினார் இனிய தென்தமிழ் நாடு சென்று எய்தினார் - - ஆறு செயல்படலம்-5) - (வினைத் தொடர்புகளிலிருந்து நீங்கிய பண்பினை உடையவர்கள் பலரும் மேவி வாழ்கின்ற இனிய தென் தமிழ் நாட்டைச் சென்று அடைந்தனர். வினையின் நீங்கிய பண்பினர் என்பதற்கு வானரர் என்று பொருள் கூறுவாரும் உளர்.) - : -