பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 + கம்பன் - புதிய பார்வை இவை அனைத்தையும் சங்க காலத் தமிழ் மக்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் பாடிய கம்பநாடன், அன்றைத் தமிழர்களிடம் இருந்த குறைகளைக் கோசலத்தில் ஏற்றவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 14 பாடல்களில் மருத நிலத்தையும், அதில் வாழும் மக்கள் வாழ்க்கை முறையையும் வருணித்த கவிஞன், மருதத் திணைக்குரிய பரத்தையர் பற்றி ஒரு சொல்கூடச் சொல்லவில்லை என்பது வியப்புக்குரியது. புலனடக்க அடிப்படையில் காவியம் தொடங்கினவன் பரத்தையரைப் பற்றிப் பேசுதல் பொருந்தாக் கூற்றாகிவிடும். எனவே அதை அறவே ஒதுக்கிவிட்டான். புலனடக்கத்தில் தொடங்கியதால், அதன் விளைவு களையும் கூடவே பேசிச் செல்கிறான். மக்கள் எவ்வாறு பொழுது போக்குகின்றனர் என்பதை வைத்துத்தான் அவர்களுடைய மனவளர்ச்சியை எடை போட முடியும். கோசல நாட்டு மக்களின் பொழுதுபோக்கை அவன் கூறுகின்ற விதமே சிறப்பானதாக உளது. - - ஊடல், கூடல், இன்இசை பாடவும், விறலியர் பாடல் கேட்கவும். ஆடவும் பொழுது போம் சிலர்க்கு யானை ஏறவும் குதிரைகள் பூட்டிய இரதம் ஏறவும் வறுமையால் வாடியவர்கட்குப் பரிவுடன் வழங்கவும் பொழுதுபோம் சிலர்க்கு போர்க்கலை தெரிதலின் பொழுதுபோம் சிலர்க்கு தேறல் மாந்தி, சூது உந்தலின் பொழுதுபோம் சிலர்க்கு (நகரப்பட்லம்-66, 67, 69) ஒரு நகரம் என்றால் பல்வேறு வகையான மக்களும் இருக்கத்தானே செய்வர். அவரவர் பொழுதுபோக்கும் முறையில் அவரவர் மனவளர்ச்சியை அறிய வழிவகுக்கும் கவிஞன் பொருந்திய மகளிரோடு என்று முன்னர்க் காட்டப் பெற்ற பாடலில் மனநிலையில் உயர்ந்துள்ள