பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 109 மக்களின் பொழுதுபோக்கை வருணித்தான். அதனை அடுத்துத் தாழ்நிலையிலுள்ள மக்கள் பற்றி நகரத்தில் பேசுகிறான். இவர் நால்வகையினர். முதல் வகை இசை நாட்டியம் என்பவற்றிலும், இரண்டாம் வகை போர்ப் பயிற்சியிலும், மூன்றாம் வகை சுகவாழ்வு வாழ்ந்துங்கூட வறுமையுடை யாரை மறவாமல் வழங்குகின்ற பண்பிலும் திளைக்கின்றனர். நான்காவது வகையினர் குடியிலும் சூதிலும் பொழுதைப் போக்குகின்றனர். நாட்டு நகர மக்கள் வேறுபாடு நாட்டு வருணனையில் மனவளர்ச்சி உடையவர்களின் பொழுதுபோக்கைக் கூறின கவிஞன், நகரமாந்தர் பொழுதுபோக்கைப் பேசும்பொழுது சூதாடுபவர்கள் சிலர் உண்டு என்று கூறுகிறான். இன்றுங்கூட கிராமியப் பகுதிகளில், சோம்பிப் பொழுதைக் கழிப்பவர்களையும் குதிரைப் பந்தயம் செல்பவர்களையும் காண முடியாது. செல்வர்கள் நிறைந்து வாழும் நகரங்களில் இத்தகைய மக்கள் வந்து கூடுவது தடுக்க முடியாத ஒன்றுபோலும்! இதை 19ஆம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிஞன் கூறுவது, அவனுடைய தீர்க்கதரிசனத்திற்கு எடுத்துக்காட்டாகும். இவ்வாறு கூறுவது சமுதாயத்தில் இத்தகையவர்களும் சிலர் உண்டு என்பதை அறிவிப்பதற்கே அன்றி வேறு காரணம் ஒன்றும் இல்லை. - அறநெறியைக் கடைப்பிடித்துப் பொறிபுலன்களை அடக்கி வாழ்தல் என்றால், காட்டுக்கு ஒடிக் கனசடை வளர்த்து, மனித சமுதாயத்தையே மறந்து வாழ்தல் என்பது பொருளன்று. இத்தமிழ் நாட்டார். அத்தகைய துறவை, வாழ்க்கை முறையை என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை. மேலே கூறப்பெற்ற இரண்டு பண்புகளையும் (கடைப் பிடித்தல், அடக்கி வாழ்தல்) மேற்கொண்டவர்கள் வெளித்தோற்றத்திற்கு எவ்வித மாறுபாட்டையும்