பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 + கம்பன் - புதிய பார்வை காட்டுவதில்லை. அனைவரையும் போலவே அவர்களும் உண்டு, உடுத்து, இல்லறம் நடத்தி, நன்மக்களைப் பெற்று, உலகிற்கு உபகாரமாக வாழ்கின்றனர். ஆகவே, கவிஞன் மக்களின் அன்றாட வாழ்வு பற்றிக் கூறும்போது வேறுபாடு ஒன்றையுங் காண முடிவதில்லை. பந்தினை இளையவர் பயிலஇடம். மயில்.ஊர் கந்தனை அனையவர் கலைதெரி கழகம் காதைகள் சொரிவன செவிநுகர் கனிகள் (நாட்டுப்படலம்-48, 5) இளம் மகளிர் பந்தாடும் இடமும், முருகனை ஒத்த இளைஞர்கள் கலைக் கழகங்களில் ஈடுபட்டுத் தம் அறிவை வளர்க்கின்ற இடமும், - - செவிக்குத் தேன் என இருத்தலின் பலரும் விரும்பும் கவிதைகள் காப்பியங்களில் நிறைந்துள்ளன.) - மகளிர் முன்னேற்றம் - எந்த ஓர் இனமும், அந்த இனத்தவர் வாழும் நாடும் முன்னேற்றம் அடைய வேண்டுமாயின், அந்த இனத் திலுள்ள அனைவரும் அதற்கு உதவியாக இருத்தல் வேண்டும். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய மூன்று பிரிவினரும் கூடுமானவரை ஒரே கொள்கையுடன் வாழ்ந்தால ஒழிய முன்னேற்றம் கிடைப்பது கடினம். அதிலும் சிறப்பாக எந்த ஒர் இனத்திலும் ஏறத்தாழச் சரிபாதியாக உள்ள மகளிர் முன்னேற்றம் பெறவில்லை யானால், அந்த இனம் வளர்ச்சி குன்றும் ஆண்கள் மட்டும் எத்துணை வளர்ச்சி அடைந்தாலும் அது ஒருபக்க வளர்ச்சியாக முடியுமே தவிர, முழுப் பகுதி வளர்ச்சியாக ஆக முடியாது. எத்தனை குறைகளிருந்திருப்பினும் சங்ககால மக்கள் வாழ்க்கையில் மகளிர் சமஉரிமை பெற்று வாழ்ந்தனர் என்பதை அவர்கள் இலக்கியம் மூலமே அறிய