பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 111 முடிகிறது. கல்வி, அறிவு, பண்பாடு ஆகியவற்றில் அக்கால மகளிர் ஆண்கட்கு எவ்விதத்திலும் குறைந்து நிற்கவில்லை. அரசர்கட்கும் அறிவு கொளுத்திய மகளிரும், முரண்பட்ட இரு அரசரிடைச் சந்து செய்விக்கச் சென்று, அப்பணியில் வெற்றி பெற்ற மகளிரும் உண்டு. பழைய கிரேக்கம் முதலிய நாகரிகங்கள் இன்று இல்லாமல் போனதற்கும், இத் தமிழர் நாகரிகம் மட்டும் இன்றும் நின்று நிலைத்துத் தழைப்ப தற்கும், இது ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்க வேண்டும். மகளிரைப் போற்றி மதித்து உரிமை வழங்கிய வரலாறு, ஏனைய நாடுகளில் அதிகம் காணப்படவில்லை. சங்க காலத்தை அடுத்த காலங்களிலும், இக்கொள் கைக்கு ஊறு ஏதும் விளையவில்லை. ஆனால் களப்பிரர் இடையீட்டுக் காலத்தில் இக்கொள்கைக்கு மாறான கொள்கை இடம் பெறலாயிற்று. மகளிர் வீடுபேறு அடையும் தகுதியுடையவர் அல்லர் என்றும், அவர்கள் . பாவப்பிறவிகள் என்றும் கூறும் கொள்கை உடையவர்கள் களப்பிரர். - பக்தி இயக்கக் காலத்தில் மகளிர் நிலை எனவே, அவர்களை அடுத்துத் தோன்றிய பக்தி இயக்கக் காலத்தில் மகளிர்க்கு உரிய முறையில் ஏற்றந் தந்தனர் நாயன்மார்களும் ஆழ்வர்களும் தாம் வழிபடும் கடவுளுக்கேகூடப் பெண் இயல்பு தந்து அந்தக் கடவுளே பெண் ஆண் வடிவாக உள்ளான் என்பதை வலியுறுத்திச் சென்றனர். ஆண்டாள், காரைக்காலம்மையார், திலக வதியார், மங்கையர்க்கரசியார் போன்ற அடியார்கள் ஏனைய ஆழ்வார்கள், நாயன்மார்களுடன் உடன்வைத்து எண்ணப் பெற்றனர். எனவே, தமிழரின் தனிப் பண்பாகிய மகளிர்க்கு மதிப்புத்தரும் இம் மரபு மறுபடியும் தமிழ கத்தில் தழைத்து ஓங்கிற்று.