பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 + கம்பன் - புதிய பார்வை கம்பன் காட்டும் மகளிர் இதன் அருமைப்பாட்டை அறிந்த கம்பநாடன், இது வளரும் சமுதாயத்திற்கு இன்றியமையாதது என்பதை நினைந்து, கோசல சமுதாயத்தில் மகளிர் உரிமையை ஏற்றுகிறான். பெருந் தடங்கண் பிறைநுதலார்க்கு எலாம் பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும், அன்றி, விளைவன யாவையே? (நாட்டுப்படலம்-35) [அகன்ற பெரிய கண்களையும், பிறை போன்ற நெற்றியையும் உடைய பெண்கட்குப் பொருத்தமான கல்வியும், செல்வமும் நிறைந்திருத்தலால், வறுமையால் வாடிவந்தார்க்கு ஈதலும், அன்றாடம் விருந்தினரை உபசரிப்பதும் அல்லாமல் நடைபெறும் செயல்கள் வேறு யாவை ?) நெறிகடந்து பரந்தன நீத்தமே (நாட்டுப்படலம்-4) (தனக்கென்று அனுமதிக்கப் பெற்ற வழியை மீறிச் செல்வது வெள்ளம் மட்டுமே) பொற்பின் நின்றன. பொலிவு; பொய்இலா நிற்பின் நின்றன நீதி மாதரர் அற்பின் நின்றன அறங்கள்; அன்னவர் கற்பின் நின்றன, கால மாரியே! (நாட்டுப்படலம்-59) (நற்பண்புகளில் அழகு நின்றன; நியாயங்கள் பொய் கலவாத உண்மையில் நின்றன; அறங்கள் மகளிருடைய அன்பில் நின்றன; பருவ மழை அம்மகளிரின் கற்பில் நின்றன.) கோசல மகளிரின் பண்பாட்டைக் கூறவந்த கவிஞன் இந்த மூன்று இடங்களில் அதுபற்றிய குறிப்பைத் தருகிறான்.