பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 113, அழகில் குறைவில்லாத மகளிர் என்பதைப் பெருதடங்கண் என்பதாலும், பிறைநுதல் என்பதாலும் தெரிவித்துவிடுகிறான். பொருந்து கல்வியும் செல்வமும் பூத்தலால் என்ற சொற்கள் நின்று ஆராயப்பட வேண்டியவை. எல்லாக் கல்வியும் எல்லாருக்கும் பொருந்தாது என்பதை இன்று வாழுகின்ற நாம் அறிவோம். வேதியல் (Chemistry)படித்துவிட்டு, ஆவணக் gorffluĵgio (Sub Registrar Office) groupģēģ5ŲTrenéř Gersibl 164ff எத்துணைப்பேர்! அவர் கல்விக்கும், தொழிலுக்கும் என்ன தொடர்பு? எனவே வீட்டிலிருந்து மனையறம் பேணுகின்ற மகளிர்க்கு எத்தகைய கல்வி வேண்டும்? அவர்கள் பண்பாட்டை வளர்க்கும் கல்விதானே தேவை: கணிதத்தில் உயர்பட்டப் படிப்புப் படித்துவிட்டு வீட்டில் அமர்ந் திருப்பவர்கட்கு அவர் பெற்ற கல்வியைப் பொருந்து கல்வி என்று கூற முடியுமா? எனவேதான் மனையறம் புரப்ப வர்கட்கு ஏற்ற பண்பாட்டை வளர்க்கும் கல்வி பெற்றனர் என்பதைப் பொருந்து கல்வி என்கிறான் கவிஞன்! பொருந்திய கல்வி பெற்றாலும் தம் மனத்தில் தோன்றும் உயர்ந்த எண்ணங்களைச் செயல்படுத்த வேண்டுமெனின் அதற்குரிய பொருள் செல்வம் வேண்டும். அது இல்லை யானால் ஊமையன் கண்ட கனவாக அவர்கள் எண்ணங்கள் தோன்றி மாய்ந்துவிடும். எனவே கல்வியுடன் செல்வத்தையும் சேர்த்தான் கவிஞன். செல்வத்தை வைத்து ஆள்பவன் வீட்டுத் தலைவனாக இருந்து, இவள் எதற்கெடுத்தாலும் அவன் கையை எதிர்பார்க்க வேண்டி வந்தால் எவ்வாறு அவள் தான் விரும்பியதைச் செய்ய முடியும்? எனவே அவளிடத் திலேயே செல்வம் இருந்ததென்று கவிஞன் கூறுகிறான். பொருளாதாரச் சுதந்திரம் மகளிர்க்கு வேண்டும் என்று இன்றுதான் நம்மில் சிலர் உணர்ந்து அதனை வெளிப்படை யாகக் கூறுகின்றனர். ஆனால் நம் கவிஞன் தீர்க்கதரிசி ஆகலான் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே இதனைக் கூறிவிடுகிறான். அடுத்துள்ள சொல் நந்தலால் என்பதாகும்.