பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 115


سب سہہ

உபசரிக்கின்றார்களாம் அம்மகளிர். அதனைத் தான் வைகலும் (தினந்தோறும் விருந்து ஒம்புகின்றனர் என்று கூறுகிறான் கவிஞன். இத்துணைக் கல்வியும் செல்வமும் உடைய மகளிர் மனங்கோணாமல், அகங்காரம் கொள்ளாமல், எவ்வாறு இதனைச் செய்ய முடிகிறது? அதற்கு விடையாகத்தான் தொடக்கத்திலிருந்தே புலனடக்கத்தைக் கூறி வருகிறான் கவிஞன். புலனடக்கம் உடையார்க்குத்தான் தன்னலம் கருதாமல் பிறரிடம் அன்பு செய்ய முடியும். அந்த அன்பை வளர்ப்பதற்கே அவர்களுடைய கல்வி பயன்படுகிறது. அன்பும் கல்வியும் சேர்ந்தவர்கள் கையில் பொருளும் கிடைத்தால் என்ன ஆகும்? அச் செல்வம் அனைவருக்கும் பயன்படும் என்ற கருத்தில், - பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயன் உடையான் கண் படின் (திருக்குறள்-21) ஊருணி நீர் நிறைந்தற்றே உலகு அவாம் பேர் அறிவாளன் திரு. (திருக்குறள்-215) (பயன்தரும் கனிகளையுடைய மரம் உள்ளூரின் கண் பழுத்தது போலாகும், ஒப்புரவாகிய பண்பாடு உடைய வனிடம் செல்வம் இருப்பின். உலகம் முழுவதையும் ஒன்றாகக் காணும் பரந்த அறிவினை உடையவனிடம் செல்வம் சேர்வது உள்ளுர்க் குளத்தில் நீர் நிறைவது போலாகும் என்கிறார் வள்ளுவர்.) இத்தனை கருத்தையும் உள்ளடக்கிக் கொண்ட பொருந்து செல்வமும் என்ற பாடலின் மூலம் ஒர் ஒப்பற்ற குறிக்கோள் சமுதாயத்தைக் கற்பித்துக் காட்டுகிறான் கவிஞன். சாதாரண மக்கள் என்றால் போலியாகவும் நற்பண்புகளைப் பெற்றவர்கள் போல் நடிக்கவும்