பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 + கம்பன் - புதிய பார்வை செய்யலாம் அல்லவா? இம்மகளிருடைய பண்பு ஆழமாக நிலைத்துள்ளதா, அன்றி ஒரு குறிப்பிட்ட காலத்துக்குக் குறிப்பிட்ட தேவைக்காக மேற்கொள்ளப்பட்டதா என்று ஐயுறவும் இடம் உண்டு. மேலும் நற்பண்புகள் சாதாரண காலத்தில் காட்டப்படலாம். ஆனால், ஒரு சோதனை என்று வந்தவிடத்து, அது நிலைக்குமா என்றுங் காண்டல் வேண்டும். அதற்கும் விடை கூறுவான் போன்று, கவிஞன், 'நெறிகடந்து பரந்தன நீத்தமே என்று கூறுகிறான். ஆற்றில் வெள்ளம் வந்தால்தான் கரையை உடைத்துக்கொண்டு வழியில்லாத வழியில் செல்லும் என்றுங் கூறுவதால், இவர்கள் எத்தகைய சோதனையிலும் நிலை தவறார் o என்பதையும் குறித்துவிடுகிறான். ஏன் மகளிரிடமே பண்பாட்டைக் காட்ட வேண்டும்? இத்தனை இடங்களிலும் மகளிரைப் பற்றியே கவிஞன் குறித்துச் செல்வதையும் கவனிக்க வேண்டும். நாட்டுப் படலத்தின் இறுதியில், மாதரார், கற்பின் நின்றன அறங்கள்’ என்று கூறுவதன் மூலம், இக் கருத்தை வலியுறுத்துகின்றான். இதற்குச் சான்று வேண்டுமா? அடுத்த அடியில் அதனையும் கூறிவிடுகிறான். அன்னவர் கற்பினால்தான் பருவமழை தவறாமல் பெய்கின்றது என்று முடிக்கின்றான். ஏன் இத்தனை பண்பாடுகளையும் மகளிரிடமே ஏற்றிப் பேச வேண்டும்? என்று சிந்திக்கும் பொழுதுதான், கம்பநாடனை உலகமகா கவிகளுள் தலைசிறந்தவன் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஒரு சமுதாயத்தில் ஆடவர் எத்துணைச் சிறந்தவர் ஆயினும், அச் சமுதாயம் ஆவதும், அழிவதும் அதிலுள்ள மகளிரால்தான் என்பது வரலாறு கண்ட உண்மை. ஆண்கள் அறம் பற்றிக் கூறுவனவற்றை வீட்டிலிருந்து கடைப்பிடிப்பவர்கள் பெண்களே யாவர். எனவேதான்,