பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 117 தான் கற்பிக்கும் கோசலம் என்ற கற்பனை நாட்டில் குறிக்கோள் தன்மை நிறைந்த மக்களாகக் குடியேற்றுகிறான் கவிஞன். மேலும் ஒரு சமுதாயத்தின் எதிர்காலம் அதில் வாழும் குழந்தைகளைப் பொறுத்தது ஆகும். அக் குழந்தைகளைப் பெற்று, பாலையும் பண்பாட்டையும் கொடுத்து வளர்ப்பவர் மகளிரே. எனவே, மகளிர் தவறினால் அச் சமுதாய அழிவை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இத்தனை பண்பாடும், ஒழுக்கமும், அன்பும், அருளும் எங்கிருந்து தோன்றும்? இத்தனையும் தோன்றி வளரும் வயலாக அமைவது புலனடக்கம் என்ற ஒன்றுதான். எனவே ஐம்பொறி வாளியும், நெறியின்புறம் செலாக் கோசலம் என்ற முகவுரைக்கு விரிவுரையாக, நாட்டை அமைத்துக் காட்டிவிட்டான். இத்தகைய மகளிரும், அவர்களால் வளர்க்கப்படும் குழந்தைகளும், அவர்களை மணந்து நல்லறம் நடத்தும் ஆண்களும், கோசலத்தில் நிறைந்திருந்தால் அந்த நாட்டில் என்னென்ன நடைபெறும் என்று வியக்கத் தோன்று கிறதா? இதோ உங்கட்கு விடை தருகிறான் கவிஞன். அந்தக் கற்பனை நாட்டில், கூற்றும் இல்லை, ஓர் குற்றம் இல்லாமையால் சீற்றம் இல்லை, தம் சிந்தையின் செம்மையால் ஆற்றல் நல் அறம் அல்லது இல்லாமையால் ஏற்றம் அல்லது இழிதகவு இல்லையே! வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால் திண்மை இல்லை, நேர்செறுநர் இன்மையால் உண்மை இல்லை, பொய் உரை இலாமையால் வெண்மை இல்லை, பல்கேள்வி மேவலால், (நாட்டுப் படலம்-39, 33) (கூற்றம்-தண்டனை, சீற்றம்-கோபம்; இழிதகவுகீழ்மைக் குணம், வண்மை-வள்ளல் தன்மை; திண்மைவலிவு: செறுநர்-போரிடும் பகைவர்; பொய் என்ற ஒன்று