பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 + கம்பன் - புதிய பார்வை இன்மையின் உண்மை என்று தனியே விதந்து ஒத ஒன்றும் இல்லை; வெண்மை-அறியாமை) 'இலது என்றலின் உளது என்பது தருக்க வாசகம், பகை, போர் என்பன இன்மையால், இவர் வலிமை உடையவர் என்று கூற வழி இல்லை. பொய் என்ற ஒன்று இருந்தால்தான் அதன் மறுதலையாய உண்மை என்ற பெயரும் வரும். ஆக நாட்டையும் அதன் மக்களையும் அமைத்துக் காட்டிய பிறகு அரசனையும் அவன் வீட்டையும் கூறப் புகுகிறான் கவிஞன். - தலைநகர் வாழ் செல்வர்கள் சாதாரணமாக அரசன் உறையும் நகருக்குக் காவலாய் அமைவது அந்நகரைச் சுற்றியுள்ள மதில்கள். மதிலைக் கூறப்புகும் கவிஞன், அது மிகமிக உயர்ந்துள்ளது என்று கூறுவதுதான் மரபு. இதன் கருத்து யாதெனில், இவ்வளவு உயரமான மதிலை யாரும் எளிதில் கடந்து வர முடியாது என்பதாம். மரபுபற்றி மதில் உயர்ந்தது என்றும், பலவகைப் போர்க் கருவிகளும் அதில் நிறைந்துள்ளன என்றும் கூறிவிட்டு, இறுதியாக ஒரு வரியில் வியப்புக்குரிய செய்தி ஒன்றைக் கவிஞன் கூறுகிறான். அயோத்தி நகர மதில்கள், இரவிதன் குலமுதல் நிருபர் சேணையும் கடந்து, திசையையும் கடந்து திகிரியும். செம்தனிக் கோலும் ஆணையும் காக்கும்; ஆயினும் நகருக்கு அணி என இயற்றியது! அன்றே நகரப் படலம்-13) (சூரிய குலவேந்தர்களான அயோத்தி மன்னர்களின் ஆக்ஞா சக்கரமும், செங்கோலும், ஆணையும் எல்லாத் திக்கையும், எல்லாத் தூரத்தையும் கடந்து அனைத்தையும் காக்கும். அப்படியானால் மதிலின் பணி என்னவென்றால், நகருக்கு அழகு செய்வதாம்.)