பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 119 அயோத்தி நகரத்திலுள்ள மாளிகைகள் பற்றிப் பேச வருகிறான் கவிஞன். வானுற நிவந்தன; வரம்புஇல் செல்வத்த தான் உயர் புகழ் எனத் தயங்கு சோதிய ஊனம்இல் அறநெறி உற்ற எண் இலாக் கோன்நிகர் குடிகள்தம் கொள்கை சான்றன. (நகரப் படலம்-34) (ஆகாயத்தை முட்டுவனவாய், எல்லையில்லாத செல்வத்தை உடையனவாய், தேடிச் செல்லாமல் தானே ஓங்கி வளரும் புகழ்போல், ஒளியுடையனவாய், குற்றம் இல்லாத அறநெறியில் பொருந்தி வாழும் எண்ணிலடங்கா அரசனை ஒத்த குடிமகள் வாழும் தன்மை நிறைந்தன.) பொதுவாகச் செல்வம் நிறைந்தவிடத்தும், அதிகாரம் கூடிய இடத்தும், மக்கள் கெட்டுவிடுவார்கள் என்பது உலக நியதி. அறம் நிரம்பிய அருள்உடை அருந்தவர்க் கேனும் பெறல்அரும் திருப் பெற்றபின் சிந்தனை பிறிதாம் (மந்தரை சூழ்ச்சிப்படலம்-78) (அறத்தைக் கடைப்பிடித்து அருள் நிறைந்தவராய் வாழும் அரிய தவசிகளாயினும், பெறுதற்கரிய செல்வம் வந்துவிட்டால் பிறகு புத்தி மாறிவிடும்.) என்று கம்பனே பிறிதோர் இடத்தில் பேசுகிறான். எங்கே பொருள் அளவின்றிக் குவிகின்றதோ அங்கே மக்கள் அழுகத் Gästl fig;%ärport' (Where Wealth accumulates men decay) என்று கோல்ட்ஸ்மித் என்ற ஆங்கிலக் கவிஞன் பேசுவான். எனவேதான் அரசனை ஒத்த செல்வக் குடிகள் என்று கூறவந்த கவிஞன், மிகக் கவனமாக அடைமொழி தந்து, அச்செல்வரை வருணிக்கின்றான். ஊனம் இல்லாத அந்நெறியில் ஒழுகும் குடிகள் என்று பேசுகிற பொழுது, இத்தகையவர்கள் எந்த நிலையில் இருப்பினும், தம் தரம்