பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 + கம்பன் - புதிய பார்வை குன்ற மாட்டார்கள் என்பதையும் விளங்க வைக்கிறான் பெருஞ் செல்வத்தில் மகிழாமலும், எல்லையற்ற வறுமையின் துவளாமலும் இருக்க முடியுமா? முடியும்? எப்பொழுது, அறநெறியைப் பொருந்தி வாழும்பொழுது இது இயலும் அறநெறியைப் பொருந்தி எந்த நிலையிலும் அதனின்றும் வழுவாமல் வாழ்வது எவ்வாறு முடியும்? புலனடக்கம் உடையார், கீதை கூறும் சமதிருஷ்டி உடையவர் ஆகலின் செல்வத்தில் மகிழ்வதுமில்லை; வறுமையில் வாடுவதும் இல்லை. ஆகவே, அயோத்தி மக்களை அறநெறி உற்றவர்கள் என்கிறான். - இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான் : துன்பம் உறுதல் இலன் (திருக்குறன்-628) இன்பத்தை நாடிச் செல்லாமலும், துன்பத்தை உலகத்தின் இயல்பு என்று ஏற்றுக் கொண்டும் வாழ்பவன் துன்பம் அடைதல் இல்லை.} பெண்களைப் பொறுத்தமட்டில் பொருந்து கல்வி என்று கூறிய கவிஞன், ஆண்களையும் சேர்த்துக் கூற வரும் பொழுது, . • . : கல்லாது நிற்பார் பிறர் இன்மையில், கல்வி முற்ற வல்லாரும் இல்லை; அவை வல்லர் அல்லாரும் இல்லை; எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ! (நகரப் படலம்-74). (கற்றவர்கள் என்று விதந்து கூறுவது எப்பொழுது? கல்லாதவர் இருந்தால்தானே? எனவே கற்றாரும் : கல்லாதவரும் அங்கு இல்லை. உடையவர்கள் என்று கூறுவது எப்பொழுது? இல்லாதவர்கள் என்று சிலர் இருந்தால்தானே ? எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வத்தையும் பெற்றுத் திகழ்வதால் இல்லார் என்ற ஒரு கூட்டமோ, உடையார் என்ற ஒரு கூட்டமோ அங்கில்லை.