பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi திருக்குறள் தோன்றிய காலத்தில் (கி.பி. 2ஆம் நூற்றாண்டு) இத் தமிழர்கள் தம் பழைய வாழ்க்கையில் முழுவதுமாக ஈடுபட்டிருந்தனர். தம்முள் சண்டை இட்டுக் கொண்டாலும், அப் போர்களில் யார் வெற்றி பெற்றாலும் துன்பம், துயரம், பொருள் இழப்பு, உயிர்ச்சேதம் என்பவை ஏற்பட்டனவே தவிர, அவர்கள் வாழ்க்கைக் குறிக்கோளை, அடிப்படை நம்பிக் கைகளை, எண்ணங்களைத் தடைசெய்யும் சூழ்நிலை ஏற்பட வில்லை. எனவேதான் அவர்கள் வாழ்க்கையில் உள்ள குறைகளை வள்ளுவன் சுட்டிக் காட்டினபோது, அது யார் காதிலும் நுழைந்ததாகத் தெரியவில்லை. அவனைப் புகழ்ந்தார்கள். போற்றினார்கள். பிற இலக்கியங்களைப் போற்றுவதுபோலத் திருக்குறளையும் போற்றினார்கள். ஆனால் அது தம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒன்று என்பதை அறிந்து பயன்படுத்தினார்கள் என்று கூறச் சான்றுகள் இல்லை. இந்தச் சூழ்நிலையில், களப்பிரர்கள் தமிழ்நாட்டில் புகுந்து வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகை ஆட்படுத்திவிட்டனர். களப்பிரர் தமிழரல்லர். தமிழர் நாகரிகம் பண்பாடு என்ற எதையும் போற்றாதவர்கள். தமிழர் வாழ்வில் முக்கிய விழுப்பொருள்களாக (values) இடம் பெற்றிருந்த பெண்கள் உரிமை, பெருமை, சமத்துவம் என்பவையும், இல்வாழ்க்கையின் சிறப்புகள் என்பவையும், பொறி புலன்களை வைத்துக்கொண்டு, இன்பமான வாழ்க்கை நடத்தல் என்பதையும், இசை நாடகம் என்பவை மனவளர்ச்சிக்கு வேண்டியவை என்பதையும், தெய்வம் கொள்கை என்பதையும் களப்பிரர் ஏற்றுக்கொள்ளவில்லை. சுருங்கக் கூறினால், இத் தமிழர் எவ்வெவற்றைத் தம் உயிரினும் மேலாக மதித்தனரோ, அவை அனைத்தையும் அவர்கள் புறக்கணித்து ஒதுக்கினர். - புறத்தே இருந்து விழுந்த இந்த அடியால் தமிழர் கதிகலங்கிப் போயினர்! இப்பொழுதுதான் வள்ளுவன் கூறிய