பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 + கம்பன் - புதிய பார்வை படைத்தவன் இறைவனே என்றால், அதன் உட்கருத்து என்னவாக இருக்கும்? தீயைப் பயன்படுத்தும் முறையும் அளவும், அறிந்து பயன்படுத்தினால் இனிய உணவைச் சமைக்க முடியும். ஆனால் முறையும் அளவும் தெரியாவிடின் தீ மூட்டியவனையே முடித்துவிடும். அதேபோலப் பொறிபுலன்களையும், அவை அனுபவிக்க வேண்டிய பொருள்களையும், அளவறிந்து அனுபவிக்கும் முறை தெரிந்து மனத்தைக் கட்டுப்படுத்தி அனுபவித்தால், இந்த வாழ்வும் முழுத்தன்மை பெற்றதாக இருக்கும்; அடுத்த உலகமும் உறுதியாகக் கிடைக்கும். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதும் ஒர் குறைவு இல்லை (திருமுறை 3-24 இந்த உலகத்தில் நல்ல முறையில் எப்பொழுதும் வாழலாம். அதே நேரத்தில் அடுத்த உலகிலும் உறுதியாக இடம் உண்டு) : என்று பாடுகிறார் திருஞானசம்பந்தர். இவ்வளவும் கூறிய பிறகு எவ்வாறு இதனைச் செய்ய முடியும்? இதற்கு வழி யாது ? என்ற வினாவை எழுப்பினால் அதற்குக் கிடைக்கும் ஒரே விடை புலனடக்கம் என்ற ஒன்றுதான். எனவே அனைத்து வளர்ச்சிக்கும் மூல காரணமான புலனடக்கத்தை நிலைக்களனாகக் கொண்டு காப்பியம் அமைக்கத் தொடங்கிய கவிஞன், ஒரு கற்பனை நாட்டையும் மக்களையும் படைக்கிறான். புலனடக்கத்திற் சிறந்த அவர்கள் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தி வாழ் கின்றனர். அத்தகைய நாட்டில் அத்தகைய மக்கட்கு அரசன் ஒருவன் இருக்கிறான். இனி அவ்வரசன் பற்றிட் பேசத் தொடங்குகிறான் கவிஞன்.