பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கம்பன் கண்ட மன்னன் திTன் கண்ட கற்பனை நாட்டில் வாழும் மக்கள் எத்தகையவர் என்பதனை விரிவாகக் கூறிவிட்ட பிறகு, அத்தகைய மக்களை ஆள்வதற்கு ஒரு மன்னனைப் படைக்க வேண்டும். இத்தகைய குறிக்கோள் வாழ்க்கை வாழும் மக்களை ஆளும் குறிக்கோள் மன்னனுக்கு, ஏற்ற அமைச்சர்கள் வேண்டும். எனவே மன்னன், அமைச்சர்கள் என்ற இருவரையும் படைக்கிறான் கவிஞன், எவ்வளவுக் கெவ்வளவு குறைந்த அளவு ஆட்சி நடைபெறகிறதோ அதுவே உயர்ந்ததும் நல்லதுமான ஆட்சி' என்று இக்கால அரசியல் அறிஞர் கூறுவர். இக் கருத்தைக் கம்பநாடன் வேறு வகையில் கூறுகிறான். ஆள்பவன் தசரதன் என்ற தனிமனிதன் ஒருவன்தான். ஆனாலும் கோசல மக்கள் வாழ்வில் அவன் பங்கு பெறாத பகுதியே இல்லை எனலாம். இது எவ்வாறு முடிகிறது? மக்கள் அறநெறி நிற்கின்றனர். புலனடக்கம் மேற்கொண்டுள்ளனர். அரசன் அறநெறிக் காவலனாக இருக்கின்றான். அறுபதினாயிரம் மகளிரை மணந்தவனைப் புலனடக்கம் உடையவன் என்று கூறல் முடியுமா? ஒருவன் புற வாழ்வையும் கோலத்தையுங் கொண்டு அவனை எடைபோடுவது தவறாக முடியும். புலனடக்கம் இல்லாதவனாக ஒருவன் இருப்பின், அவனுக்குக் குருவாக வசிட்டன் இருத்தல் இயலாத காரியம். அதற்கும் மேலாக இராமன், பரதன் என்ற இருவர் அவன் மகனாகப் பிறக்கின்றனர். 1. A Government which governs the least is the best government