பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 + கம்பன் - புதிய பார்வை தக்கார் தகவு இலர் என்பது அவர் அவர் எச்சத்தாற் காணப் படும் (திருக்குறள்-14) ஒருவர் நடுநிலைமை முதலிய பண்பாடுடையவர், இல்லாதவர் என்பது அவரவர் பெற்றுள்ள மக்களின் நன்மை தீமையால் அறியப்படும்.) நன்மக்கள் பெறுபவர்கள் சால்புடையவர்கள், என்பது தெளிவாகலின், இராமனையும் பரதனையும் பெற்றவன் சான்றோன் என்பது கூறத் தேவை இல்லை. சாதாரணன் இங்கு அரசனாக முடியாது இரண்டாவதாகவும் ஒன்றை அறிய வேண்டும். இத் துணைப் பண்பாட்டில் நிரம்பியுள்ள மக்களுக்குத் தகுதியற்ற ஒருவன் அரசனாக ஆதல் இயலாது. ஒரோ வழி எதிர்பாராத காரணங்களால் தகுதி இல்லாத ஒருவன் மன்னனாகி விட்டாலும் நீண்ட நாட்கள் அம் மக்கள் அவனிடம் அடங்கி இரார். தசரதனோ அறுபதினாயிரம் ஆண்டுகள் அரசு புரிந்தான் என்று கூறப்படுகிறது. எனவே அவன் தக்கான் என்று கணிப்பதில் தவறு இல்லை. அரசனைக் கவிஞன் அறிமுகப்படுத்தும் முறையே அழகாக அமைந்துள்ளது. ஆழ்மாண் நகருக்கு அரசன், அரசர்க்கு அரசன் f இம்மாண் காதைககு ஒா இறை ஆய இராமன் என்னும் மொய்மாண் கழலோன்-தருநல் அற மூர்த்தி அன்னான் (அரசியல் படலம்-) (அந்த மாட்சிமைப்பட்ட நகருக்கு அரசனாவான், பல அரசர்கட்கும் அரசனாவான். இந்த மாட்சிமைப்பட்ட கதைக்குத் தலைவனாகிய இராமன் என்னும் வீரக்கழலை அணிந்தவனைப் பெற்றவன் நல் அறத்தின் வடிவானவன்.)