பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 + கம்பன் - புதிய பார்வை அவர்களைக் காக்கவும் எப்பொழுதும் கவனமாக இருத்தல் வேண்டும். எனவே தசரதன் மன்னனாக இருந்து ஆற்றிய பணியைக் கூறுகிறான் கவிஞன். f தாய் ஒக்கும் அன்பில், தவம் ஒக்கும் நலம் பயப்பில் சேய்ஒக்கும், முன்நின்று ஒரு செல்கதி உய்க்கும் நீரால் நோய் ஒக்கும் என்னில் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி ஆயப் புகுங்கால் அறிவு ஒக்கும்-எவர்க்கும் அன்னான் (அரசியல் படலம்-4) (எவர்க்கும் வேண்டியவர், வேண்டாதவர் என்ற வேறுபாடின்றி அன்பு செய்வதால் தாய் போன்றுள்ளான். தவம் போலப் பின்னர் நன்மை பயக்கின்றான். தவறான வழியில் செல்ல முற்படுவோரையும், எது நல்வழி என்று ஐயுற்று மயங்குவோரையும், இதுதான் நல்வழி என்று காட்டி, அவர்களை அவ்வழியில் செலுத்துவதனால் மகன் போல் உள்ளான். மக்கள் தவறு செய்யும்போது தண்டிப் பதால் நோய் போன்றுள்ளான். மறுபடி அவர்கள் தவறு செய்யாமல் அந்தத் தண்டனை அவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்தலின் மருந்தும் ஆகிறான். அவன் நூல்களை ஆராயும்பொழுது அறிவின் வடிவாகவே ஆகிவிடுகிறான்.) தாயும் நோயும் அரசனும் ஒரு மனிதன்தானே? எனவே, அவனுக்கும் விருப்பு வெறுப்புகள் ஏற்படுமல்லவா? இவ் விருப்பு வெறுப்புகளால் வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு தோன்றிவிடுமே? நலஞ்செய்வதிலும், தண்டனை வழங்குவதிலும் விருப்பும் வெறுப்பும் இருந்தால் பெருந்தொல்லை வழங்கிவிடுமே! எனவேதான், தசரதன் நலஞ்செய்கிறான் என்று கூறும்பொழுது எவர்க்கும் என்ற சொல்லை அமைப்பதன்மூலம், விருப்பு வெறுப்புகள் அரசப்பணிகளில் தலையிடுவதில்லை என்பதையும் அறிவிக்கிறான். தாயாக இருந்து அன்பு செய்யும் அவன்,