பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 127 நோய் போலிருந்து தண்டனையும் வழங்குகிறான். இது யாருக்கு இயலும்? புலனடக்கம் செய்து, பற்று, அவா, விருப்பு, வெகுளி முதலிய குற்றங்களை மனத்திலிருந்து அறவே நீக்கியவர்கள்தான் சமதிருஷ்டியுடன் எதனையும் அணுக முடியும். தாயாக இருந்து அன்பு செய்தாலும், அரசனாக இருந்து தண்டித்தாலும், இரண்டின் அடிப் படையும் அன்புதான். தண்டிப்பவன் காழ்ப்புணர்ச்சி வெறுப்புணர்ச்சி முதலியவற்றால் தூண்டப்பட்டுத் தண்டித்தால் அது தவறு. ஆனால் யார், எவர் என்ற வேறுபாடு காணாமல் நடுநிலையில் நின்று, இதற்கு இது உரியது என்று கண்டு, மீண்டும் அத் தவறு நிகழாது இருக்க வேண்டித் தண்டிப்பது அன்பின் அடிப்படையில்தான், என்பதை அறிதல் வேண்டும். சண்டேச நாயனார் சிவ அபராதம் செய்த தந்தையின் காலைச் சேதித்தார். தந்தையின் மாட்டுக் கொண்ட அன்பின் காரணமாகவே, அவர் பெருந்தண்டனைக்கு உள்ளாகக் கூடாதே என்பதற் காகவே, தந்தையின் காலைச் சேதித்தார். நோய் உடல் முழுவதும் பரவி உயிரைப் போக்கிவிடக் கூடாதே என்ற அன்பினால்தான், மருத்துவர் புரை ஒடிப்போன காலை வெட்டி எடுத்துவிடுகின்றனர். இந்த முறையில், அரசு செய்பவன் ஒருவன் இருந்தால், அவனை இறைவன் என்று கூறுவதில் தவறு இல்லை. பரம்பொருள் விரும்பும் மன்னர் குறிக்கோள் தன்மை பெற்ற ஓர் அரசனைக் கற்பிக்க வேண்டும் என்று கம்பன் கருதினான். மனிதன் புலனடக்கத்தால் அகங்கார மமகாரங்களை மாற்றித் தன்னைத்தான், அடக்கி ஆளும் நிலைமை பெறுவது சீரிய காரியந்தான். காட்டிடைச் சென்று கடுந்தவம் செய்து இதனைப் பெறுகின்றவர்கள் உண்டு. ஆனால் நாட்டிடை