பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 129 திணைகளில் பாதீடு என்பவை அக் குடும்பங்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு முடிவு காணமாட்டா. பகைவர் நாட்டிலுள்ள பசுக்கூட்டங்களைப் போர் புரிந்தோ, மறைமுகமாகவோ கொள்ளையடித்துக் கொண்டுவந்து, கொள்ளையடித்த வீரர்கள் முதலா யினோர் பங்கிட்டுக் கொள்ளுதலையே தொல்காப்பியம் ‘பாதீடு என்று குறிக்கிறது. இதில் ஒரு தலைவனை இழந்த குடும்பம் தன் பங்குக்கு எத்தனை பசுக்களைப் பெற்றாலும், இறந்த தலைவனுக்கு ஈடாகுமா? இந்தப் பழம் தமிழ் மன்னர்கள் தம் குடிகளையும் அவர்கள் நலங்களையும் எவ்வாறு கருதினர்? எவ்வாறு பாதுகாத்தனர்? என்று அறிய வாய்ப்பே இல்லை. வரி வசூல் என்ற பெயரில் என்ன செய்தார்கள் என்று விரிவாக அறிய வாய்ப்பில்லை. ஆனால் கொடுங்கோல் மன்னர்கள் வரி என்ற பெயரில் கொள்ளையடித் துள்ளார்கள். புறம் முதலிய நூல்கள் இவ்வாறு தவறிழைத்த ஒரு சிலரைப் பற்றிக் கூறுகிறது. சங்க காலத்தை அடுத்துவந்த காலத்திலும், களப்பிரர் இடையீட்டுக் காலத்திலும், தமிழ்க் குடிமக்கள் மகிழ்ச்சி யாக வாழ்ந்தார்கள் என்று கூற முடியாது. இப் பழந்தமிழ் மன்னர்கள் அமைச்சர்களை வைத்துக் கொண்டிருந்தார் கள் என்பதற்கு அருகிய குறிப்புகள் உள்ளன. அலவுற்றுக் குடிகூவ, ஆறு இன்றிப் பொருள் வெஃகி கொலை அஞ்சா வினைவரால் கோல் கோடியவன் நீழல் உலகுபோல் உலறிய (பாலைக்கலி-10) (துயரந் தாங்காமல் குடிமக்கள் அலறவும், வகை தொகை இல்லாமல் பொருளின்மேல் ஆசைப்பட்டு வசூல் செய்தும், கொலைக்கு அஞ்சாத செயல்களால் செங்கோல், கொடுங்கோல் ஆனவனுடைய குடைக்கீழ் உள்ள உலகு உலர்ந்துபோம்.)