பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 + கம்பன் - புதிய பார்வை புறநானூறு முழுவதிலும் குடிமக்கள் பழிதுாற்றுவதற்கு அஞ்சுவதாகப் பேசும் அரசர் இருவர், இருவரும் பாண்டியர்களேயாவர். மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த தென்புலங் காவலின் ஒரீஇப் பிறர் வன்புலங் காவலின் மாறியான் பிறக்கே (புறம்-7) ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்ற மன்னன் வஞ்சினங் கூறும்பொழுது, பல மக்களையுங் காக்கும் பாண்டியர் குடியில் பிறவாமல் பிறருடைய வலிய நிலங்களைக் காவல் காக்கும் பிறப்பை அடைவேனாக' என்று பேசுகிறான். அடுத்துத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனும் வஞ்சினம் கூறுகையில், என் நிழல் வாழ்நர் செந்நிழல் காணாது கொடியன் எம் இறையெனக் கண்ணி பரப்பிக் குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக (புறம்-12) (என் குடைக்கீழ் வாழும் மக்கள் வேறு சென்று அடையும் நிழல் இல்லாது எம் மன்னன் கொடியவன் என்று கூறிக் கண்ணிர் உகுத்துப் பழிதூற்றும் கொடுங் கோலனாக ஆவேனாக என்று பேசுகிறான்.) நூற்றுக்குத் தொண்ணுாற்றைந்து பாடல்கள் போர்கள் பற்றிப் பேச, குடிமக்கள் துயரம்பற்றி இரண்டே இரண்டு குறிப்புக்கள்தான் உள்ளன. இதில் வியப்பு என்னவெனில், இந்த இரு பாடல்களும் போர் அடிப்படையில் பிறந் தனவே ஆகும். பல்லவர் காலத்திலும், கம்பன் காலம் வரையும் மக்களைப் பற்றிக் கவலைப்பட்ட மன்னர் குறைவுதான். எனவே கம்பநாடன், இதற்கு ஒரு வழி செய்ய முற்படுகிறான். நம் காலத்துக் கவிச்சக்கரவர்த்தி பாரதி பாடியதை அன்றே கம்பன் நினைந்தான் போலும்.