பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 133 உடலாகிய மன்னவன் எனவே, சங்க காலம் முதல் பன்னிரண்டாம் நூற் றாண்டு வரை பரவி இருந்த ஒரு கருத்தை மாற்றிக் கூற விரும்புகிறான் கம்பன். அரசன் என்ற நிறுவனத்தை மாற்ற இயலாது என்பதைக் கம்பன் அறிவான். ஆக, அந்த நிறுவனத்தையும் வைத்துக்கொண்டு, அதே நேரத்தில் அதனால் விளையும் கொடுமைகளையும் இல்லாமல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறான். இது இயலுமா இயலாதா என்ற பிரச்சினைக்கு இங்கு இடமே இல்லை. அவன் கண்ட கோசலம் என்ற கற்பனை நாட்டுக்கு (utopla) ஒர் அரசன் வேண்டும். ஏனைய அரசர்களைப் போல் அவன் இருந்தால் கம்பன் கண்ட நாட்டுக்கு அது ஏற்காது. ஆகவே, அரச நிறுவனத்தையும் வைத்துக் கொண்டு, அதே நேரத்தில் அதனால் விளையும் தீமை களும் இல்லாமல் செய்துவிட முயல்கிறான். அவனுக்கு முன்னர் யாரும் கற்பனைகூடப் பண்ணாத ஒரு கருத்தைப் பேச முற்படுகிறான். அரசன் உயிர், குடிகள் உடல் என்று கூறுவதன் பொருள் யாது? உயிர் விரும்புவதைச் செய்வதுதானே உடம்பின் கடமை. உயிர் ஏவுதற் கருத்தா உடல் இயற்றுதல் கருத்தா. இங்கு உடம்புக்கு என்று எவ்வித உரிமையோ, விருப்பைத் தெரிவிக்கும் உரிமையோ இல்லை. திருவுடை மன்னர் திருமால்' என்று கூறும்பொழுதும் இதே கருத்துத்தான் குறிக்கப்படுகிறது. கடவுள்தானே தலைவன், அவன் கட்டளைப்படிதானே உலகமும் உயிர்களும் இயங்குகின்றன. அவன் அழிக்கவும் ஆக்கவும் முற்படு கையில் இவ்வுயிர்களைக் கலந்துகொண்டா செய்கிறான்? இல்லையே! அதுபோல உடம்பை விட்டுவிட்டுப் போக வேண்டும் என்று உயிர் நினைத்துவிட்டால் உடம்பின் விருப்பம் யாது என்று கேட்பதில்லையே? எனவே,