பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 + கம்பன் - புதிய பார்வை மன்னனை உயிர் என்றும், திருமால் என்றும் கூறும் பொழுது, ஆக்கவும் அழிக்கவும் வல்லவன் என்பதும், யாருடைய ஆணைக்கும் அவன் காத்திருப்பதில்லை என்பதும் நன்கு விளங்கும். இந்த நிலையில் மக்கள் விருப்பத்தை அறிந்து அதன்படி நடக்கும் மன்னவன் ஒருவன் உண்டு என்றால், அது கற்பனையில்தான் நடைபெறும். நம்மால் வாக்குச் சீட்டுமூலம் தேர்ந் தெடுக்கப் பெற்றுச் சட்டமன்றம் செல்கிறவர்கட்குப் பதவியின் ஆயுளே நான்கு வருடந்தானே! மறுபடியும், நாமாகப் பார்த்து அவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பினால்தானே அவர்கட்கு உறுப்பினர் என்ற பட்டம் மறுபடியும் கிட்டும். முதலிலும், இரண்டாம் முறையும் நம்மிடம் வந்து நம்முடைய அன்பை, பரிவை நாட வேண்டியவர்கள், அந்த இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் ஆடுகிற ஆட்டம் நாம் அறிந்ததுதானே! அதிலும் மக்களாட்சி என்ற பெயரில் யார் வேண்டு மானாலும் தேர்தலுக்கு நின்று வாக்குகள் பெற்றுப் பதவிக்கு வரலாம். இன்றைய ஆட்சிமுறை பண்டை நாள்போல எளிதானது அன்று. பல்வேறு சிக்கல்கள் நிறைந்த இற்றை நாளைய ஆட்சியைக் கல்விப்பெருக்கம் இல்லாதவர்களும் நடத்தலாம் என்ற நிலை வந்துவிட்டது. மடங்கல் மொய்ம்பினான் உடம்பாயினன் இவற்றை எல்லாம் மனத்துட் கொண்ட கம்பநாடன், தான் நிர்மாணித்த நாட்டின் தலைவன் ஆய்ந்தே கடந்தான் அறிவென்னும் அளக்கர் (5) என்று கூறியதோடு அல்லாமல், ஒரு புதுக்கருத்தையும் வெளியிடுகிறான். நிறைந்த கல்வியும் ஆழ்ந்த அறிவும் உடைய மன்னனா கலின், தான் ஏதோ தெய்வப் பிறவி, இம்மக்களை எப்படி வேண்டுமானாலும், ஆளலாம் என்று நினையாமல், அம்மக்கள் நினைத்ததை நிறைவேற்றும் இயற்றுதற்